சாத்தனுார் அணை 83 அடியை எட்டியது: விநாடிக்கு 498 கனஅடி வருகையால் விவசாயிகள் மகிழ்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் 88 அடி எட்டியது விநாடிக்கு 498 கன அடி தண்ணீர் வருகின்றது இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணை, தமிழகத்தில் உள்ள பெரிய அணைகளில் முக்கியமானது. இந்த அணை கர்நாடக மாநிலத்தில் இருந்து உருவாகி வரும் தெண்பெண்ணை ஆற்றில் 1956ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் 119 அடியாகும்.அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7ஆயிரத்து 321 மில்லியன் கன அடியாகும். அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து உருவாகி வரும் இந்த தெண்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம், ஒசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூரில் உள்ள கடலில் கடைசியாக கலக்கிறது. தற்போது கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதி மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் செப்.6-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். என கூறியுள்ளனர்
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை முதல் ஒரு நாளைக்கு தினந்தோறும் மழையின் அளவானது அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 130 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 120 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 70 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் அதன்படி போன்ற பகுதிகளின் வழியாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 27ம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.75 அடியாக இருந்தது. ஆகஸ்ட் 28ம் தேதி நிலவரப்படி 82 அடி எட்டியது. அணைக்கு வினாடிக்கு 231 கன அடி தண்ணீர் வந்து . நான்காம் தேதி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 509 கன அடி வந்தது இதனால் அணையின் நீர்மட்டம் 82.5 அடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி 498 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 83அடியை எட்டியது. சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் அணையின் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.