நெல் கொள்முதல் செய்ய லஞ்சகேட்ட அதிகாரிகளை ஸ்கெட்ச் போட்டு சிக்க வைத்த விவசாயிகள்...!
ஆரணி அருகே வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை வாங்குவதற்கு 2,790 ரூபாய் லஞ்சம் கேட்ட மேலாளர் ஜெகதீசன் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள பையூர் கிராமத்தில் ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேவூர் அடுத்த சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் வயது (45) என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைந்த 62 நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளார்.
நெல் கொள்முதல் நிலையத்தின் வேளாண் சங்க செயலாளராக உள்ள ஜெகதீஸ்வரன் வயது (42), ஒரு மூட்டைக்கு ஒன்றுக்கு 45 ரூபாய் வீதம் 2,790 ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே நெல் மூட்டைகளை எடை போட்டு ரசீது வழங்கப்படும் என்று கூறியுள்ளார். பணத்தை கொடுக்க விரும்பாத ஆனந்தராஜ், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.
அவரிடம் ஜெகதீஸ்வரன் லஞ்சமாக கேட்ட 2790 ரூபாய்க்கான பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தை நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த கிடங்கு பாதுகாவலர் ராஜேந்திரன் வயது (60) என்பவர் மூலம் ஜெகதீஸ்வரன் இன்று பிற்பகல் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மைதிலி, அன்பழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மறைந்து இருந்து ஜெகதீஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோரை லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, ஜெகதீஸ்வரன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடம் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த தொகை அனைத்தும் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக பெற்றது என்பது தெரியவந்தது. அதன்பின்னர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக லஞ்சம் ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளை கைது செய்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸிடம் ABP NADU குழுமத்திலிருந்து பேசினோம்.
"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது நண்பர் பிரேம்குமார் என்பவரும், இருவரும் விவசாயம் செய்து மொத்தம் 60 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளனர். பையூரில் உள்ள நேரடி வேளாண்மை உற்ற்பத்தியாளர் விற்பனை கூடத்திற்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளனர். முதலில் நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர்.
அதனடிப்படையில் நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்று ஜெகதீஸ்வரன் என்ற அதிகாரியிடம் பேசியுள்ளார் ஆனந்தராஜ். முதலில் சிட்டா, அடங்கல் கேட்டிருக்கும் ஜெகதீஸ்வரன். பின்னர், அதெல்லாம் வேண்டாம். நெல்லை நானே கொள்முதல் செய்கிறேன். ஆனால், ஒரு மூட்டைக்கு 45 ரூபாய் என மொத்தம் 2,790 ரூபாய் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டுள்ளார். ஆனந்தராஜ் செவ்வாய்கிழமை மாலை (17.08.2021) புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையை எங்கள் அதிகாரிகள் மறைமுகமாக ஈடுபட்டனர். புகார் அளித்த ஆனந்தராஜ் என்பவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னோம்.
லஞ்சம் கேட்ட மேலாளர் ஜெகதீஸ்வரன் பெற்றுக்கொள்ளாமல் அங்குள்ள அதிகாரி ராஜேந்திரனிடம் கொடுக்க சொல்லியுள்ளார் அதை பெற்றுக்கொண்ட உதவியாளர் ராஜேந்திரன் கையும் களவுமாக பிடித்தோம். அதன்பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலாளர் ஜெகதீஸ்வரன் தான் பணத்தை பெற்றுக்கொள்ள சொன்னர் என குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மேலாளரும் லஞ்சம் நான் தான் கேட்டேன் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார் ரசாயனம் தடவியபடி கொடுத்தனுப்பிய பணம் மட்டுமின்றி, நேற்று காலையிலிருந்து மதியம் வரை மற்ற விவசாயிகளிடமிருந்து லஞ்சமாக பெற்ற 10,000 ரூபாயையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாயி "ரஞ்சித்திடம்" பேசினோம்,
நான் 70 மூட்டை என்னுடைய நண்பர்கள் ஆனந்தராஜ் 33 மூட்டை, மற்றும் குமார் 100 மூட்டை என 200 நெல் மூட்டைகளை எங்களுடைய வயலில் விளைவித்த நெல்மூட்டைகளை பையூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைக் கூட நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து சென்றோம் எங்களுடைய நெல் மூட்டைகளை, எடுத்து சென்ற முதல்நாள் திங்கள் (16.08.2021) கிழமையே எங்களுடைய நெல் மூட்டைகள் முதலில் நாங்கள் தான் எடுத்துவந்தோம். நெல் மூட்டைகளை தூதி முடித்து விட்டு, எடையும் வைத்து பில்லூம் போட்டு விட்டார், ஆனால் ஒரு சிப்பத்திற்கு 45 ரூபாய் எங்களிடம் லஞ்சம் கேட்டார் மேலாளர் ஜெகதீசன் கேட்டவுடனே நாங்கள் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறைக்கு தொலைபேசிமூலம் புகார் கொடுத்தோம்,
அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு சென்று மனு மூலம் புகார் அளித்தோம் மூன்று நணபர்கள் ஆகிய நாங்கள் குறைந்த அளவு வைத்திருந்த ஆனந்தராஜ் நெல்மூட்டைக்கு மட்டும் பணத்தை கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புதன் கிழமை எங்களிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். அதன் பிறகு மேலாளர் ஜெகதீசனிடம் கொடுக்க சென்றோம் அவர் உதவியாளர் ராஜேந்திரனிடம் கொடுக்க சொன்னார் பணத்தை ராஜேந்திரன் பெற்றவுடன் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை கையும் களவுமாக பிடித்தனர்.
அதனைத்தொடர்ந்து பேசிய ரஞ்சித் இதே போன்று ஆரணி பகுதியில் இயங்கவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தச்சூர், வண்ணாங்குளம் போன் இடங்களில் உள்ள அதிகாரிகள் சிப்பத்திற்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கு கின்றனர் இதனைக், கருத்தில் வைத்துக்கொண்டு தமிழக அரசு உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.