மேலும் அறிய

அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பண்ணை வீடு உள்ளது.அந்த பண்ணை வீட்டை திருவண்ணாமலை மாவட்டம் புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நள்ளிரவில்  , பிரேம்குமார் உற்பட்ட அனைவரும் அவுட்ஹவுஸ்ல் தூங்கிக்கொண்ட இருந்தபொழுது , அடையாளம் தெரியாத திருடன் பண்ணை வீட்டுக்குள் புகுந்து, நுழைவு வாயிலின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளான் .

வீட்டுக்குள் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

அன்று இரவே  , துரைமுருகன் பண்ணை வீட்டிற்கு பக்கத்திலுள்ள வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவரின் பண்ணை வீட்டிலும் திருட முற்பட்ட கொள்ளையர்களுக்கு , பணம் , நகை ஏதும் கிடைக்காததால் ஆத்திரத்தில் ,துரைமுருகனின் பண்ணை வீட்டு நுழைவாயிலில் அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து துரைமுருகன் பண்ணை வீட்டு காம்பௌண்ட் சுவரில், ‘‘ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’’ என  எழுதி சென்றுள்ளனர் . அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’’ என எழுதி கண்ணுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.   

அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

இது தொடர்பாக ஏலகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் . 

இந்நிலையில்  வாணியம்பாடி நகர காவல்நிலைய பகுதிக்குட்பட்ட முஸ்லிம்பூர்  அபூபக்கர் தெருவை சேர்ந்த  அதாவுர் ரஹமான் என்பவர் வீட்டில்  ஜூலை மாதம் 13ஆம்  தேதியும்   , வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் வசீம் அக்ரம் என்பவர் வீட்டில்  ஜூன் மாதம்  23ஆம் தேதி  தேதியும் , இரு வீட்டிலும் சேர்த்து  40  சவரன் தங்கநகைக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது .  

இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து , புதிதாக பதவியேற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டு இருந்தார் .

அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

 இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான இன்று , தனிப்படை போலீசார் ,வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நவீத் (வயது 28 ) தந்தை பெயர் நஸீர் பாஷா என்ற இளைஞரை சோதனை செய்த பொழுது அவரிடம் 20 சவரன் தங்க நகை இருப்பது தெரியவந்தது .

 சந்தேகத்து இடமான அந்த  இளைஞரை உடனடியாக கைது செய்து திருப்பத்தூர் எஸ் பி சிபி சக்ரவர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தினர் .   தீவிர விசாரணை செய்ததில் வாணியம்பாடியில் 2 வீடுகளில்  தங்க நகையையும் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பள்ளி தாளாளர் செந்தில் குமார் ஆகியோர் பண்ணை வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்றதையும்  ஒப்புக்கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

மேலும், வாணியம்பாடியில் முஸ்லிம்பூர்  பகுதியில் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுசுவர் இருந்ததால் மேல் மாடியில் சென்று வீட்டிற்குள் நுழைய கம்பியின் வளைத்து ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாக திருடன் நவீத் தெரிவித்ததை கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

கொள்ளையன் நவீத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 457 , 380 , 294 b , 384  , 397 , 506  (II ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் இவனது இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் , 13  வயதுடைய சிறுவன் உட்பட இருவருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களையும் கைது செய்ய 3  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget