திருவண்ணாமலையில் நடுரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது
திருவண்ணாமலை சாலையின் நடுவே பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்து ஓட்டுனரும் குறுக்கே வந்த நபரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாட்டர் பாட்டிலால் தாங்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை நகரில் உள்ள பெரியார் சிலை அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பு திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் குறுக்கே சென்று பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் அரசு பேருந்து ஓட்டுனரின் டோரை திறந்து சட்டையை பிடித்து இழுத்து வாட்டர்பாட்டில் எடுத்து தாக்கியதால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பதிலுக்கு வாட்டர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சுமார் அரை மணி நேரம் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை சாலையின் நடுவே பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்து ஓட்டுனரும் குறுக்கே வந்த நபரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாட்டர் பாட்டிலால் தாங்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிப்பு@abpnadu @SRajaJourno pic.twitter.com/BRaHylu54C
— Vinoth (@Vinoth05503970) December 22, 2022
விழுப்புரம் மாவட்டம் சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செஞ்சி, மேல்மருவத்தூர், தாம்பரம் வழியாக கோயம்பேடுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த லியாகத்அலி என்பவர் இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து முன்பு திடீரென்று குறுக்கே சென்று அராஜகத்தில் ஈடுபட்டர்.திடீரென பேருந்து ஓட்டுநரின் டோரை திறந்து ஓட்டுநரின் சட்டையை பிடித்து கீழே இழுத்து வாட்டர் பாட்டில் எடுத்து அடித்து அராஜகத்தில் ஈடுபட்டார்.
அரசு பேருந்து ஓட்டுனரும் பதிலுக்கு அந்த நபரை வாட்டர் பாட்டிலால் அடித்ததால் இருவரும் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக மாறி, மாறி வாட்டர் பாட்டிலால் அடித்துக் கொண்ட சம்பவத்தால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் பேருந்தை மடக்கி ஓட்டுனரை தாக்கிய லியாகத்அலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகளை இறக்கி வேறொரு பேருந்தில் அனுப்பிவைத்து விட்டு பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். லியாகத்அலி என்பவர் இருசக்கர வாகனத்தில் பேருந்தின் முன்பு குறுக்கே சென்றது மட்டுமில்லாமல் அராஜக செயலில் ஈடுபட்டு ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.