திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய இளையராஜா
இளையராஜா தேசியக் கொடி ஏற்றும்பொழுது ஆசிரமத்தில் இருந்த மயில்கள் அனைத்தும் தோகை விரித்து கரவொலி எழுப்பி வரவேற்றது போல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.
76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் இசைஞானி இளையராஜா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாசிரமத்தில் மாநிலங்களவை நியமன உறுப்பினரும் இசைஞானியமான இளையராஜா இன்று 76-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தேசியக் கொடியினை இசை ஞானி இளையராஜா ஏற்றும்பொழுது ஆசிரமத்தில் இருந்த மயில்கள் அனைத்தும் தோகை விரித்து கரவொலி எழுப்பி வரவேற்றது போல் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆசிரமம் சார்பில் சுதந்திர தின கொடியேற்றத்திற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் இனிப்பு வழங்கி சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடினார். மேலும் இசைஞானி இளையராஜா நியமனம் உறுப்பினராக ஆகிய பிறகு முதல் முறையாக கொடியை ஏற்றி உள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று காலை 9 மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் வண்ணபலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் வானில் பறக்கவிட்டார். மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை ,
மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, வாழ்ந்து காட்டுவோம், திட்டம் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் , ஆகிய துறைகளில் சார்பில் பயனாளிகளுக்கு 3 கோடியே 31லட்சத்து 94 ஆயிரத்து 654 ரூபாய் மதிப்பீட்டில் ஆனா நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.
இதற்கு முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. காவல்துறையினர் சார்பில் காவல்துறையினர் குற்றவாளிகளை எவ்வாறு பிடிக்கின்றனர் என்று மோப்பநாய்களை வைத்து செய்து காட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்