மேலும் அறிய
Advertisement
சாலையில் கவிழ்ந்த லாரி... சிதறிய மது பாட்டில்கள். .அள்ளிச் சென்ற மக்களை தடுத்த போலீஸ்
லாரியில் கொண்டு செல்லப்பட்டுள்ள மதுபாட்டில்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி உடைந்து சிதறின.
திருப்பத்தூரில் அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி சென்ற சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மது பாட்டில்கள் சிதறியது. பாட்டில்களை அள்ளிச் சென்ற பொது மக்களை தடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர் டாஸ்மாக் குடோனிலிருந்து வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 790 கேஸ் மது பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் கொண்டு செல்லப்பட்டுள்ள மதுபாட்டில்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி உடைந்து சிதறின.
அப்பகுதியினர் உடனடியாக மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஓட்டுனர் மற்றும் கிளினர்கள் தடுத்தி நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தற்பொழுது மது பாட்டில்களை பொதுமக்கள் கொண்டு செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மதிப்பு ரூபாய் 38 லட்சம் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படியாக இருந்தும் அங்கிருந்த மது பிரியர்கள் பாட்டில்களை எடுத்து சென்றனர். இந்த விபத்தினால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion