திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக தொழில் பூங்கா அமைவதற்கான அறிவிப்பு இளைஞர்கள் மகிழ்ச்சி
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள செய்யாறு சிப்காட் ஆனது திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளதால் புதிய சிப்காட்டை மாவட்டத்தின் உட்பகுதியிலேயே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
தமிழ்நாடு அரசின் 2021-2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார் அந்த உறையில் தொழில் பூங்கா அமைவதற்கான அதன்படி தொழில்துறைக்கான பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதில் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பானது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த மாவட்டமாகவே விளங்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதார ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக உள்ளதால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களும் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் தோல் பொருட்களை தயாரிக்கும் சிப்காட் ஒன்று நிறுவப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்ததால் இந்த மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நிறுவப்பட்ட அந்த சிப்காட் தற்போது வரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30% மட்டுமே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
மீதியுள்ள பங்கு வேலைவாய்ப்புகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கிடைத்தது இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு இதுவரை முழுமையான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், இன்று திமுக ஆட்சியில் மீண்டும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிப்காட் ஒதுக்கியுள்ளது இந்த சிப்காடை திருவண்ணாமலை செங்கம், அல்லது காஞ்சி போன்ற பகுதிகளில் சிப்காட் அமைந்தால் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த முழுமையான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் கோரிக்கையும் மக்களிடையே எழுந்துள்ளது.
பட்ஜெட்டிட் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள சிப்காடை பற்றி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடம் பேசுகையில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல் சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்துவிட்டு ஓசூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற கார் மற்றும் கனரக வாகனம் மற்றும் அதன் உதரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.
அதனால் ஓசூர் பகுதியில் அமையவிருக்கும் இ-ஸ்கூட்டர் மற்றும் அதற்கு தேவையான உதிரிபாகங்கள் கம்பெனி அங்கு அமைவது போன்று திருவண்ணாமலை இருந்து பெங்களூரு மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு செல்லும் வகையில் நான்கு வழிச்சாலைகளும் உள்ளது. அதனால் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் போன்ற பகுதியில் இ- ஸ்கூட்டர் போன்ற கம்பெனி அல்லது அதற்கு உதரிபாகம் தயாரிக்கும் கம்பெனி நிறுவினால் அதிக அளவில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பொதுமக்கள் கூறி உள்ளனர்.