மேலும் அறிய
Advertisement
ஏலகிரி மலையில் போலீசாரின் அனுமதி இல்லாமல் இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும் கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஏலகிரி மலையில் போலீசாரின் அனுமதி இல்லாமல் இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ரத்னாஜெயின் (50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் பொண்ணு மாப்பிள்ளையை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்துள்ளனர். இதன் காரணமாக திடீரென ஏலகிரி மலையில் டான் போஸ்கோ கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது.
இதனை காண அப்பகுதி மக்கள் கூட்டம் சேர்ந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் அல்லது மாவட்ட போலீசாரிடமும் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கியதாலும் இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் என கல்லூரியின் முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும் கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion