மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
வேலூர் : பொன்னை ஆற்றங்கரையில் குளிப்பது, செல்பி எடுப்பதைத் தவிர்க்கவேண்டும் - எச்சரிக்கும் ஆட்சியர்கள்
கால்வாயில் சிறுவர்களைக் குளிக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுத்துக்கொள்ளவோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இரு மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
பொன்னை ஆற்றங்கரையோரம் உள்ள கால்வாய்களில் எந்தநேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கால்வாயில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். என வேலூர் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைக்கட்டு நிரம்பி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொன்னையாற்றுக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
வாலாஜா தாலுகா பொன்னைக் கிராமம் அருகே ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யும்போதும் அங்குள்ள கலவகுண்டா அணை திறக்கப்படும்போதும் அணைக்குத் தண்ணீர் வரும். தற்போது ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால் கலவகுண்டா அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது . அதன் காரணமாக அணைக்கட்டு நிரம்பி பொன்னை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பாலாற்றில் கலக்கிறது. தற்போது சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாலாற்றின் கரையோரம் உள்ள மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம்,லாலாப்பேட்டை, தெங்கால், ராணிப்பேட்டை காரை பகுதி, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி ஆகிய கிராம மக்கள், தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் என இரு மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டுள்ளனர் .
வெள்ள அபாயம் காரணமாக பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தண்டோரா போடப்பட்டது . மேலும் பொன்னை மேற்குப்புற கால்வாய் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
ஆற்றங்கரையோரம் உள்ள கால்வாய்களில் எந்தநேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கால்வாயில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். கால்வாயில் சிறுவர்களைக் குளிக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுத்துக் கொள்ளவோ, விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இரு மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion