தங்க நகைகளை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை கோரி விவசாயி தீக்குளிக்க முயற்சி
கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கியில் தன்னை ஏமாற்றி 8 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வங்கி செயலாளர் மீது நடவடிக்கை கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாயி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துளசிப் பிள்ளை வயது (65) இவர் விவசாயம் செய்து வருகின்றார். இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள நுழைவு வாயில் எதிரில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது விவசாயி துளசிப் பிள்ளையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெம்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயுடைய 23 சவரன் நகை அடமானம் வைத்து அதனுடைய ரசீதுகளையும் பெற்றுள்ளார். அதன் பிறகு 2017-ஆம் ஆண்டு நகை கடனை புதுப்பிப்பக்க வேண்டும் என வங்கி செயலாளர் சாந்தி எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நான் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று நகைகளை பார்த்தபோது 23 சவரன் நகையில் 15 பவுன் நகை மட்டுமே கணக்கில் காட்டி புதுப்பிக்க கூறியுள்ளது தெரியவந்தது. மீதமுள்ள 8 சவரன் நகை குறித்து கூட்டுறவு சங்க செயலாளரிடம் கேட்டதற்கு வங்கியில் முறையான பதிலை செயலாளர் சாந்தி அளிக்கவில்லை என்றார்.
இந்த நகை மோசடி குறித்து பலமுறை காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய நகையை மீட்டு தர கோரியும், மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர் சாந்தியின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அப்போதைய ஆட்சியர்கள் கந்தசாமி, சந்திப்நந்தூரி, தற்போதைய ஆட்சியர் முருகேஷ் ஆகிய மூன்று நபர்களிடம் நான் பலமுறை புகார் மனு அளித்துள்ளேன். ஆனால் என்னுடைய மனுவிற்கு இதுவரையில் எந்தவித அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த மன உளைச்சலில் இருந்த துளசி பிள்ளை இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனையடுத்து துளசி பிள்ளையை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
LIC Apprenticeship: மாதம் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை; காப்பீட்டு நிறுவனத்தில் வேலை- முழு விவரம்!