செய்யாறில் நீரில் மூழ்கிய தரைப்பாலம்.. கயிறு மூலம் கரையை கடக்கும் மக்கள்..!
செய்யார் பகுதியில் தரைபாலம் மூழ்கியதால் கிராம மக்கள் கையிரை பிடித்து கொண்டு செல்லும் அவலம் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அளத்துறை கிராமத்தில் தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியதால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கயிறைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டடுள்ளது. தரைப் பாலத்தை மூழ்கியபடி வெள்ள நீர் செல்வதால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செய்யாறு அடுத்த அலத்துறை கிராமத்தில் இருந்து பையூர், சௌந்தரிபுரம், மேல்தர்மா, மற்றும் பின்னத்தூர், எலப்பாக்கம், துறையூர், கல்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் செல்லும் இந்த சாலையின் வழியில் தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் ரையை கடந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி கலங்கள் வழியாக உபரி நீர் வெளியே செல்லும் போது இந்த தரைப்பாலம் முழுவதும் மூழ்கி உள்ளதால் அந்த கரையில் உள்ள பொதுமக்கள் அக்கரைக்கு செல்ல கிராம பொதுமக்கள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு உயிரை பணயம் வைத்து கயிறு மூலமாக தரைபாலத்தை கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 10 க்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் வந்தவாசி, உத்திரமேரூர் போன்ற பெரிய நகரத்திற்கு சென்று தான் வாங்க முடியும் ஆனால் தற்போது செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளும், பெரியவர்களும், பள்ளி மாணவர்களும் கயிற்றின் மூலமாக இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக பலமுறை செய்யாறு திமுக எம்எல்ஏ ஜோதியிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது. மேலும் இந்த தரைப்பாலத்தின் வழியாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கைற்றின் வழியாக செல்லும்போது பல உயிர்சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கனமழை பொழியும் போதும் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல பொதுமக்கள் தொடர்ந்து சிறமம் பட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக தமிழக அரசு அல்லது மாவட்ட நிர்வாகம் இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதியதாக மேம்பாலம் அமைக்கா வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.