ஆரணியில் சைவ ஓட்டல் உணவில் நெளிந்த புழுவால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
ஆரணியில் சைவ ஓட்டலில் உணவு சாப்பிட்ட போது திடீரென புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி. இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறையினர் மாதிரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் சாலை மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஓம் சரவணன் பவன் என்ற சைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று உணவுகள் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையில் செல்லும் வெளியூர் பயணிகளும் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த சைவ உணவகத்தில் ஆரணி நகர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் சாப்பிட்டு வருகின்றனர். வழக்கம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உமேஷ் வயது (35) என்பவர் தனது நண்பருடன் மதிய உணவு சாப்பிட சரவண பவன் உணவகத்திற்கு சென்றுள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் 2 டோக்கன் பெற்று சாப்பாடு ஓன்றுக்கு 75 வீதம் பணத்தை கொடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அதிர்ச்சி சம்பவமாக ஆட்டோடிரைவர் உமேஷ் சாப்பிட்ட கொண்டிருந்த அவரக்காய் சாம்பாரில் புழு நெளிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்மந்தமாக ஓட்டல் ஊழியர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட போது புழுவை அப்புறபடுத்தி சாப்பிடமாறு சாதரணமாக கூறியதால் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் கைலேஷ்குமார் ஆகிய குழுவினர் புழு இருந்த உணவகத்திற்கு நேரில் சென்று அதன்பேரில் ஓட்டலில் சமையல் கூடம், உணவு பரிமாறும் இடங்களில் ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாடிக்கையாளரிடம் கனிவாக பேச வேண்டும், காய்கறிகளில் புழு இருந்திருக்கலாம். அதை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி காய்கறிகளை பதப்படுத்தி உணவு சமைத்து பரிமாறுங்கள். புழுதானே என்றெல்லாம் வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேச கூடாது என ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளரை எச்சரித்தார்.
ஆரணி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் ஏற்பட்ட கோளாறால் அங்கு சாப்பிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மற்றொரு அசைவ ஓட்டலில் தேர்வு முடிந்து மாணவர்கள் சாப்பிட்டதில் அங்கும் இது போன்ற கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் எதிரொலியாக 2 அசைவ ஓட்டல்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரணியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி இறந்த சம்பவமும் கடந்தாண்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் இறந்த சம்பவத்தை அடுத்துஇச்சம்பவம் ஆரணியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.