மேலும் அறிய

ஆரணி : அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி....

ஆரணியில் 9-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சாஸ்திரியார் ,அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். அதேபோன்று இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி  வருகின்றனர்.  தற்பொழுது தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு 1-ஆம், முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் 9-ஆம்  வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆரணி : அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி....

இதையடுத்து அரசு நெறிமுறைகளை பின்பற்றி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 10 மற்றும் 11,12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 150 மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கொரோனா பரிசோதனை மாதிரிகள் பள்ளியிலேயே செய்யப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட சலி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதார துறையின் மூலம் வெளியிடப்பட்டும் நேற்று (05.012022)வெளியிடப்பட்ட பரிசோதனையின் முடிவில் இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் 9ம் வகுப்பு முதல் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு வரையில் ஆகிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை உடனடியாக 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர். 

ஆரணி : அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி....

உடனடியாக ஆரணி நகராட்சியின் மூலம் பள்ளியை சுற்றிலும்,  வகுப்பரைகளை கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்தனர். மேலும் கொரோனா பாதித்த மாணவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடமும் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்த மாணவர்களை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆரணியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்

தலைப்பு செய்திகள்

“இனியும் தாமதித்தால் டெல்டா பாலைவனமாகும்” - மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்க்கு துரைமுருகன் கொடுத்த எச்சரிக்கை
“இனியும் தாமதித்தால் டெல்டா பாலைவனமாகும்” - மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்க்கு துரைமுருகன் கொடுத்த எச்சரிக்கை
கோபாலபுரம் சென்று கலைஞர் தலையை வெட்டுவேன் சொன்ன கிருஷ்ணசாமி! கலைஞர் கொடுத்த மாஸ் ரிப்ளை!
கோபாலபுரம் சென்று கலைஞர் தலையை வெட்டுவேன் சொன்ன கிருஷ்ணசாமி! கலைஞர் கொடுத்த மாஸ் ரிப்ளை!
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க'
கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க'

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget