மேலும் அறிய

அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் முகத்தில் துளையிட்டு மின்விசிறியை மாட்டிய சம்பவம் - பக்தர்கள் அதிர்ச்சி

அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் முகத்தில் துளையிட்டு மின்விசிறியை மாட்டிய சம்பவம் பக்தர்கள் அதிர்ச்சி. இணையத்தில் வைரலாகும் காட்சி

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ் பெற்றது அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும். இந்த கோயில் சுமார் 25-ஏக்கர் பரப்பளவில் நான்கு கோபுரங்கள் மற்றும் கட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும். ஐந்து சிறிய கோபுரங்களுடன் மொத்தம் 9 கோபுரங்களுடன் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்த திருக்கோவில் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் பின்புறம் அமைந்துள்ள மலையே சிவனாக காட்சி அளிக்கிறார். கோயிலில் திரு கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. குறிப்பாக இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன.

அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் முகத்தில்  துளையிட்டு  மின்விசிறியை மாட்டிய சம்பவம் -  பக்தர்கள் அதிர்ச்சி

இக்கோயிலில் 100க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 17-ம் நூற்றாண்டில் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக வரலாறு உண்டு, இந்த கோபுரம் 171 அடி உயரம் கொண்டது.

அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் முகத்தில்  துளையிட்டு  மின்விசிறியை மாட்டிய சம்பவம் -  பக்தர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள  திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம், நவராத்திரி பத்து நாள் உற்சவம் மற்றும் கார்த்திகை தீபத்தின் போது  சாமி புறப்படுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மண்டபங்கள் மேற்கூரை உத்தரங்களில் பல்வேறு கலைநயம் மிக்க தொன்மை வாய்ந்த அழகிய மூலிகையின் மூலம் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த அழகிய ஓவியங்களை சிதைக்கும் வகையில் மற்றும் பக்தர்கள் வசதிக்கு என திருக்கோயில் நிர்வாகம் கோயிலில்  பல இடங்களில் கோயில் கோபுரங்களில் திருக்கோவிலின் மதில் சுவற்றில் ஆணிகளை அடிப்பதும் உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என பக்தர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் முகத்தில்  துளையிட்டு  மின்விசிறியை மாட்டிய சம்பவம் -  பக்தர்கள் அதிர்ச்சி

குறிப்பாக அலங்காரம் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள நடராஜர் மூலிகை ஓவியத்தின் முகத்தில் துளையிட்டு மின்விசிறி மாட்டியுள்ள சம்பவம் பக்தர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலவித கண்டனங்கள் எழுந்த நிலையில் இதனை அறிந்த கோயில் நிர்வாகம் தற்போது அவசர அவசரமாக மின்விசிறியை அகற்றியுள்ளனர். இதே போன்று சென்ற வருடம் கார்த்திகை தீபத்திற்கு முன்பாக கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலையின் முகத்தை உடைத்து அதில் சிசிடிவி கேமரா பொறுத்தபட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியநிலையில் தற்போது நடராஜரின் மூலிகை ஓவியத்தின் முகத்தில் கோயில் ஊழியர்கள் துளையிட்டு மின் விசிறியை மாட்டி தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களை செய்து வருகின்றனர். தற்போது வரையில் அவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget