மேலும் அறிய

சாத்துனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - - 4 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீர்மட்டம் உயர்ந்து 117 அடி எட்டியதை தொடர்ந்து 9 கண் மதகுகள் மூலம் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உருவகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 1956ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்  ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து  பருவமழை  பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது .

சாத்துனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - - 4 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 6040 கன அடி வீதம் வந்து வந்து கொண்டிருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் நேற்று முன்தினம் முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 116 அடியாக இருந்தது . தற்போது காலை  நிலவரப்படி அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதே நிலையில் தொடர்ந்து தண்ணீர் வருகை தந்தால் இன்னும் ஓரிரு நாளில் அணையின்  முழு கொள்ளளவான 119 அடி எட்டி விடும். அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது இருப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாத்துனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - - 4 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையில் இருந்து  வினாடிக்கு 6040 ஆயிரம் கன அடி நீர் 9 கண்மதகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்வரத்து குறித்து 24 மணி நேர கண்காணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget