போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகக் காரணம் இதுதான்! – அதிர்ச்சி விளக்கம் கொடுத்த உத்தரகாண்ட் முதல்வர்!

கிழிந்த ஜீன்ஸ்களை அணிவதால்தான் சமூகம் சீர்கேடு அடைகிறது, இதுபோன்ற காரணங்களால் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள் என அவர் பேசியுள்ளார்.

FOLLOW US: 

உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு கமிஷனின் இரண்டுநாள் செயல்முறை விளக்கக் கூட்டத்தை அந்த மாநில முதல்வர் திரத் சிங் ரகாவத் தொடங்கிவைத்தார். நிகழ்வில் அவர் பேசியவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. கிழிந்த ஜீன்ஸ்களை அணிவதால்தான் சமூகம் சீர்கேடு அடைகிறது, இதுபோன்ற காரணங்களால் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள் என அவர் பேசியுள்ளார். அவர் பேசியதன் தொகுப்பு கீழ்வருமாறு:போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகக் காரணம் இதுதான்! – அதிர்ச்சி விளக்கம் கொடுத்த உத்தரகாண்ட் முதல்வர்!

" பெண்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை. நான் ஒரு பெண்ணை அண்மையில் சந்தித்தேன் அவர் என்.ஜி.ஓ ஒன்றை நடத்துகிறார். என்னைச் சந்திக்க வந்தவர் முட்டி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை அணிந்திருந்தார். "
-உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முட்டியைக் காண்பிக்கும் பெண்கள் என்.ஜி.ஓ. நடத்துகிறார்கள்!

நாகரிகம் என்கிற பெயரில் கிழிந்த உடைகளை அணிந்து வலம்வருவது, முட்டி தெரிய ஆடை அணிந்து தங்களைப் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போலக் காட்டிக் கொள்வது.இதுதான் இன்றைய தலைமுறையின் பண்பாடாக இருக்கிறது.வீடுகள் இல்லாமல் வேறு எங்கே அவர்களுக்கு இந்தச் சுதந்திரம் கிடைக்கிறது, பள்ளிகளும் ஆசிரியர்களும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிழிந்த உடை அணிந்து திரியும் என் வீட்டுப்பிள்ளையை நான் எங்கே அழைத்துச் செல்லமுடியும்? இவையெல்லாம் மேற்கத்திய நாகரிகம் படுத்தும் பாடு. அங்கிருக்கும் மக்கள் யோகா கற்றுக்கொள்கிறார்கள், முழுதாக உடை அணிகிறார்கள். நாம் இப்படி அம்மணமாகத் திரிகிறோம். பெண்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை. நான் ஒரு பெண்ணை அண்மையில் சந்தித்தேன் அவர் என்.ஜி.ஓ ஒன்றை நடத்துகிறார். என்னைச் சந்திக்க வந்தவர் முட்டி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை அணிந்திருந்தார். இவர் போன்ற பெண்கள் சமூகப்பணியாளராக இருக்கும்போது இவரிடமிருந்து சமூகம் தவறான விஷயங்களைக் கற்றுக்கொள்ளாதா? நாம் செய்வதைதானே நமது பிள்ளைகளும் பின்பற்றுவார்கள்.நாம் தவறான உதாரணமாக இருந்தால் பிள்ளைகளும் தவறானதைதான் செய்வார்கள். பிள்ளைகள் போதைக்கு அடிமையாவது எல்லாம் இப்படித்தான் உருவாகிறது. நாம் எவ்வளவு நாகரிகமாக இருந்தாலும் வீட்டில் நல்ல பழக்கங்களைக் கற்றுத்தரும்போது அந்தச் சூழலில் வளரும் பிள்ளை வாழ்க்கையில் தோல்வி அடைவதில்லைஇவ்வாறு அவர் பேசியுள்ளார்.

திரத் சிங் ராவத் ஒரு வாரத்துக்கு முன்புதான் உத்தரகாண்ட் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJP india Women uttarkhand jharkand tirat singh rawat Child rights sexual abuse substance abuse Youth Westernisation NGO

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

மயிலாடுதுறை : "எங்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்” - ஊர்க்காவல் படையினர் கோரிக்கை..!

மயிலாடுதுறை :

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

Vellore : ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

Vellore :  ஸ்டாக் இல்லாததால் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி இன்று நிறுத்தம்..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !