Dove,Tresemme: ரிஜக்ட் லிஸ்ட்டில் இடம்பெற்ற டவ் ஷாம்பு - யூனிலிவர் நிறுவனம் வெளியிட்ட பட்டியல்: காரணம் என்ன?
இவ்வகை ஷாம்புக்களில் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் என்ற வேதிப்பொருள் மாறுபாடு உள்ளது.
டவ் ஷாம்பினை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து , பிரபல யூனிலிவர் நிறுவனம் அந்த ஷாம்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஷாம்புகளில் ஒன்றாக இருப்பது டவ் . இந்தியாவில் பெரும்பாலானோர் இந்த ஷாம்புவை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம். இதே போல Tresemme ஷாம்புவிற்கும் ஏராளமான வாடிக்கையாளார்கள் உள்ளனர். இந்த வகை ஷாம்புக்களில் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கின்றன. இதனை உலர் ஷாம்பு என அழைப்பார்கள். இவ்வகை ஷாம்புக்களில் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் என்ற வேதிப்பொருள் மாறுபாடு உள்ளது. இது உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகள் வெளியானதை அடுத்து அந்த ஷாம்புவை திரும்ப பெறுவது என யூனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, Rockaholic மற்றும் Bed Head உலர் ஷாம்பு பிராண்டுகள், Nexxus, Suave, Tresemmé மற்றும் Tigi போன்ற உலர் ஷாம்புகளும் திரும்பப்பெறும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், அக்டோபர் 2021 முன் தயாரிக்கப்பட்ட Dove, Nexus, Suave, Tresemme, Tigi போன்ற பிராண்டுகள் சந்தையில் இருந்து யூனிலிவர் நிறுவனம் திரும்ப பெற முடிவு செய்துள்ளது.
View this post on Instagram
மே 2021 கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள Valisure என்ற பகுப்பாய்வு நிறுவனம், பல பொருட்களில் பென்சீன் இருப்பதைக் கண்டறிந்தது, இது ஜான்சன் & ஜான்சன், எட்ஜ்வெல் உள்ளிட்ட பல ஏரோசல் சன்ஸ்கிரீன்களை திரும்பப் பெற வழிவகுத்தது. பெர்சனல் கேர் கோ., பனானா போட் மற்றும் பீர்ஸ்டோர்ஃப் ஏஜியின் காப்பர்டோன், ப்ராக்டர் & கேம்பிள் கோ.வின் சீக்ரெட், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் யூனிலீவரின் சுவேவ் ஸ்ப்ரே-ஆன் டியோடரண்டுகள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. இது குறித்து பேசுகையில் Valisure தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லைட்."நாங்கள் பார்த்ததைப் பொறுத்தவரை, துரதிர்ஷ்டவசமாக, ஏரோசல் உலர் ஷாம்புகள் போன்ற பிற நுகர்வோர் தயாரிப்பு வகைகள் பென்சீன் மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படலாம், மேலும் இந்த பகுதியை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்" என தெரிவித்தார்.
உலர் ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்களுக்கான பென்சீன் வரம்புகளை FDA நிறுவவில்லை, ஆனால் அதில் "எந்தவொரு விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்" இருக்கக்கூடாது. இந்த செய்தி டவ் , ட்ரசம்மே உள்ளிட்ட வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.