மேலும் அறிய

Vinayagar Chaturthi 2024: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 150 கிலோ மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்..

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார்.

இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

இந்தாண்டு மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா  07.09.2024 முதல் 20.09.2024 முடிய சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 10.00 மணிக்குள் மேல் பிரம்மாண்டமான கொழுக்கட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ,  உச்சிவிநாயகர் சன்னதியில் 75 கிலோ  150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்பட்டது. 

இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. மேலும் 2004-ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.

Vinayagar Chaturthi 2024: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 150 கிலோ மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்..

பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி  14- தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். 

மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4-00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். 

Vinayagar Chaturthi 2024: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 150 கிலோ மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்..

விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கடை படையல்.. 

இந்த நாளில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் சாமி  தரிசனத்திற்காக மக்கள் அதிகமாக குவிந்துள்ளனர். கோவில்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில், தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ அளவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை செய்து படையல் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும்,  மலைக்கோட்டையில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சிப் பிள்ளையாரும், நடுவே தாயுமானஸ்வாமி, மட்டுவார் குழலம்மை சகிதம் எழுந்தருளியுள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் நான்கு கைகளுடன் நின்றபடி அருள்பாலிக்கும் கோவில் மாணிக்க விநாயகர் கோவில் ஆகும்.150 கிலோ அளவில் பிரம்மாண்டமாக செய்யப்பட்ட இந்த கொழுக்கட்டை தாயுமானஸ்வாமி  தயாரிக்கப்பட்டது. 

இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சியில் இருக்கக்கூடிய விநாயகருக்கு எடுத்துச் சென்று படைத்து, சாமி தரிசனம் செய்ய  வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தனர்.  மேலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget