மேலும் அறிய

Vinayagar Chaturthi 2023: திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க விதிமுறைகள் என்னென்ன..?

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு கட்டுபாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு சிலை கரைப்பதற்கான விதிமுறைகள் :

1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

Vinayagar Chaturthi 2023: திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க விதிமுறைகள் என்னென்ன..?

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

4. சிலைகளுக்கு வர்ணம் புசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயண சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

Vinayagar Chaturthi 2023: திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க விதிமுறைகள் என்னென்ன..?

5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுப்பிய செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியாMaharashtra : Maharashtra Women Scheme.. பணத்தை திருப்பி கேட்ட அரசு! அதிர்ந்து போன பெண்கள்!Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Cancer Vaccine Using AI: இப்படி மட்டும் நடந்துட்டா எவ்ளோ உயிர காப்பாத்தலாம்.!? ஏஐ மூலம் கேன்சர் தடுப்பூசி
இப்படி மட்டும் நடந்துட்டா எவ்ளோ உயிர காப்பாத்தலாம்.!? ஏஐ மூலம் கேன்சர் தடுப்பூசி
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? தனித்துவமாகத் தெரிய டிப்ஸ்!
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? இதோ டிப்ஸ்!
Savukku Shankar:
Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
Embed widget