(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சி : 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்கள் மொத்தம் 23,10,413 பேர்
அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 91.4 சதவீதம் பேரும், கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 30 சதவீதம் பேரும் ஆதார் எண் இணைத்துள்ளனர்.
தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,03,95,103 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேரும் உள்ளனர். தொடர்ந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023ன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பது ஆகியவை நடந்தது. அதன்படி வாக்காளர் பட்டியலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெயர் சேர்க்க 10,34,018 பேரும், நீக்கம் செய்ய 7,90,555 பேரும், முகவரி மாற்றம் செய்ய 4,78,726 பேரும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 11 பேரும் என மொத்தம் 23,03,310 பேர் விண்ணப்பித்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 3 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் அதாவது 61 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 91.4 சதவீதம் பேரும், கள்ளக்குறிச்சியில் 89.03 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 30 சதவீதம் பேரும் ஆதார் எண் இணைத்துள்ளனர். ஆதார் இணைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் வரை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்கள், பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:
மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,81,966 பேர், வாக்குச்சாவடி எண்ணிக்கை 324, ஸ்ரீரங்கம் மொத்த வாக்காளர்கள் 3,01,659 பேர், வாக்குச்சாவடி 339, திருச்சி மேற்கு மொத்த வாக்காளர்கள் 2,68,570 பேர், வாக்குச்சாவடி 270, திருச்சி கிழக்கு மொத்த வாக்காளர்கள் 2,51,948 பேர், வாக்குச்சாவடி 255, திருவெறும்பூர் மொத்த வாக்காளர்கள் 2,86,545 பேர், வாக்குச்சாவடி 296, லால்குடி மொத்த வாக்காளர்கள் 2,18,971 பேர், வாக்குச்சாவடி 250, மண்ணச்சநல்லூர் மொத்த வாக்காளர்கள் 2,48,986 பேர், வாக்குச்சாவடி 273, முசிறி மொத்த வாக்காளர்கள் 2,27,021 பேர், வாக்குச்சாவடி 260, துறையூர் (தனி) தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,24,747 பேர், வாக்குச்சாவடி 277 ஆகும். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 23,10,413 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களுக்காக 2,544 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 20 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 322 பேர் என மொத்தம் 23 லட்சத்து 10,413 வாக்காளர்கள் உள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 34 ஆயிரத்து 288 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2,544 வாக்குச்சாவடிகள் உள்ளன.இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 43,423 பேர் சேக்கபட்டுள்ளனர். மேலும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட ஸ்ரீரங்கம் தொகுதி (3,01,659) பேர்கள், குறைவான வாக்காளர்கள் கொண்ட லால்குடி தொகுதி (2,18,971) பேர்கள் ஆகும்.