மேலும் அறிய
Advertisement
Trichy: அரசு வேலை வாங்கி தருவதாக அதிகரிக்கும் மோசடிகள் - திருச்சியில் ரூ.3 லட்சம் ஏமாந்த நபர்
திருச்சி மாவட்டத்தில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் ரூபாய் மோசடி, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரம் கம்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது 54). இவர் முன்பு திருப்பரம்பூர் ஜெய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை தனக்கு நன்கு தெரியும். உங்கள் மனைவிக்கு ஆசிரியை பணி வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கல்யாணசுந்தரம் கடந்த 2023 நவம்பர் 8ம் தேதி ஒரு ரூ.3 லட்சம் பணத்துக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவர் வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு ரூ. 22,000 மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கல்யாணசுந்தரம் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்யாணசுந்தரம் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நடந்து பத்து ஆண்டுகள் கழித்து புகார் வந்துள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு விதமாக மக்களிடையே மோசடிகள் சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பணத்தை இரட்டிப்பாக வழங்குகிறோம் , ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும், என்று பலவிதமான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இவற்றை குறித்து பொது மக்களிடையே பல்வேறு கட்டமாக காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு , சிலர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும் தேவையற்ற ஆசை வார்த்தைகளை நம்பி, பணத்தை எதிலும் முதலீடு செய்ய வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக அரசு வேலை வாங்கி தருவதாக மோசடிகள் அதிகரித்து வருகிறது. மக்கள் அரசு வேலையை பணம் கொடுத்து வாங்கினால் சட்டபடி குற்றம். ஆகையால் பொதுமக்களும் தேவையற்ற செயலில் ஈடுபடாமல், ஏமாற்றம் அடைய வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion