Trichy Power Shutdown: உங்கள் தேவைகளை முன்கூட்டியே செய்துக்கோங்க திருச்சி மக்களே... நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது
Trichy Power Shutdown (8.7.25): மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். இந்த பராமரிப்புப் பணிகள் மின்சார விநியோகத்தின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை.

Trichy Power Shutdown (8.7.25): திருச்சி மாநகர் பகுதியில் நாளை 8ம்தேதி மின்தடைசெய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மின்நிறுத்தம் இருந்தா அரைக்க வேண்டியதை அரைச்சுக்கோங்க. மாலை வரை வியர்க்க போகுதுங்க.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
மின்வாரியம் மாதந்தோறும் ஒவ்வொரு பகுதிகளாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். இந்த பராமரிப்புப் பணிகள் மின்சார விநியோகத்தின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை. பராமரிப்பு நடைபெறும் நாள் மற்றும் நேரத்தையும், பகுதியையும் மின்வாரியம் முன்கூட்டியே அறிவித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்ற காரணம்தான்.
மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் பொதுவாக மின்சார சாதனங்களை ஆய்வு செய்யவும், பழுதுகளை நீக்கவும் மற்றும் மின் விநியோகத்தை சீராக வைத்திருக்கவும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம்.
பராமரிப்புப் பணிகள் நடைபெறும் போது, மின் விநியோகம் தடைபடும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் மின் தேவைகளுக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல், அவர்கள் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி மெயின்கார்டு கேட், கம்பரசம்பேட்டை
அந்த வகையில் திருச்சி மாநகரம் மெயின் கார்டு கேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை ( ஜூலை 8 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, வி என் நகர், மாதுளம் கொல்லை, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சிந்தாமணி, ஆண்டார் வீதி, வானப்பட்டறை, மாரிஸ் தியேட்டர், கோட்டை ஸ்டேஷன் ரோடு, பனையக்குறிச்சி, உறையூர் ஹவுசிங் யூனிட், கீரை கொல்லை, மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, சீரா தோப்பு, முத்தரசநல்லூர், ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாளை காலை சீக்கிரமே எழுந்து மின்தடை இருக்கிறது என்பதை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு உங்க சமையல் உட்பட தண்ணீர் தேவைகளை பார்த்துக்கோங்க. மின் சம்பந்தப்பட்ட உங்கள் தேவைகளை முன்கூட்டியே செய்துக்கோங்க மக்களே.






















