மேலும் அறிய
Advertisement
Trichy: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை - 26 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி..?
போலி சான்றிதழை சமர்பித்த ஆசிரியை சகாய சுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மதுராபுரி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சிங்கராயர் மனைவி சகாயசுந்தரி (வயது 49). இவர் தற்போது மண்ணச்சநல்லூரை அடுத்த மூவராயன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். முன்னதாக கடந்த 1997-ம் ஆண்டு பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் ஆசிரியர்களின் உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு அவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு- 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து நடவடிக்கை.#TrichyDistrict #fakecertificate #joinedtheteachingprofession #Caseregisteredagainsttheteacher. pic.twitter.com/QQqs8FSEBd
— Dheepan M R (@mrdheepan) February 10, 2023
மேலும் இதற்கான ஆய்வு பணிகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆசிரியை சகாயசுந்தரி பணியில் சேரும் போது வழங்கிய சான்றிதழ் போலியானது என்பது தெரிந்தது. தமிழ்நாடு இடைநிலைக்கல்வி வாரியம் வழங்க வேண்டிய சான்றிதழை சகாயசுந்தரி போலியாக தயாரித்து அதனை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஏமாற்றி பணியில் சேர்ந்தது உறுதியானது.
இதுதொடர்பாக முசிறி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆசிரியை சகாயசுந்தரி மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை சகாய சுந்தரி பணியில் சேர்ந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அவர் போலி சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion