திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது - மாநகர காவல்துறை ஆணையர் காமினி நடவடிக்கை
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 16.05.2024 உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சவர்ணசாமிகோயில் தெருவில் தள்ளுவண்டி காய்கறி வியாபாரியிடம், ஒரு நபர் கத்தியை காண்பித்து பணம் கேட்டதாகவும், அதற்கு மேற்படி வியாபாரி பணம் தர மறுக்கவே அவரது தள்ளுவண்டியை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியும், சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000/- பணத்தை பறித்துக்கொண்டு சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், வழக்கு விசாரணையில், உறையூர் காமாட்சியம்மன்கோயில் தெருவை சேர்ந்த ரவுடி ராஜா (எ) மாரீஸ் ராஜா வயது 46, த.பெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இச்செயலில் ஈடுப்பட்டது தெரிய வந்தும், உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் ரவுடி ராஜா (எ) மாரீஸ் ராஜா என்பவர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் மாட்டு வண்டி பந்தயத்தில் முன்விரோதத்தால் ஒருவரை கொலை செய்த வழக்கு மற்றும் ஒரு அடிதடி 6T601 இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
மேலும், கடந்த வாரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் 6வது கிராஸில் உள்ள வாகன ஒட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் ஒருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரத்தை திருடியதாக புகார் பெறப்பட்டது.
மேலும், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த வெற்றிவேல் வயது 48, த.பெ.அண்ணாமலை என்பவரை கைது செய்து, வழக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் வெற்றிவேல் என்பவர் மீது கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம் மற்றும் தில்லைநகர் காவல் நிலையங்களில் தலா 1 திருட்டு என 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, ரவுடி ராஜா (எ) மாரீஸ் ராஜா மற்றும் வெற்றிவேல் ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்யபட்டது.
இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும் திருச்சி மாநகரில் வழிப்பறி, திருட்டு , கொலை போன்ற தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.