மேலும் அறிய

திருச்சி ஜி.கார்னர் மேம்பாலம் சீரமைக்கும் பணி நிறைவு - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் பகுதியில் பழுதடைந்த மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணி நிறைவடைந்தது, பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு தொடக்கம்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-கார்னர் அருகே மேம்பாலத்தின்கீழ் பகுதி அதிக போக்குவரத்து காரணமாக பழுதடைந்திருப்பது கடந்த ஜன.11ம் தேதி கண்டறியப்பட்டது. இதனால் உடனடியாக அப்பகுதியின் மற்றொரு சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இச்சாலை பல்வேறு சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், சேலம் போன்ற ஊர்களுக்கும் சென்றுவர ‘முக்கிய சாலை என்பதல் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் எடுத்துக்கொண்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் உட்பட தேசிய நெடுங்சாலைத்துறை பொறியாளர்கள், ரயில்வே நிர்வாக உயர் அதிகாரிகள் என அனைவரும் நேரில் பாலத்தை ஆய்வு செய்தனர்.

திருச்சி ஜி.கார்னர் மேம்பாலம் சீரமைக்கும் பணி நிறைவு - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

திருச்சி என்ஐடி பேராசிரியர்கள் மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் குழுவினர் ஆகியோரும் பாலத்தை ஆய்வு செய்தனர். ஐஐடி பேராசிரியர் குழுவினர் வகுத்து அளித்த திட்டத்தின்படி துரித கதியில் பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஜன.19ம் தேதி பூஜையுடன் துவங்கியது. இதன்படி பாலத்தின் மையப்பகுதியில் நவீன கருவிகளின் உதவியுடன் பக்கவாட்டு சுவர் டிரில் செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட ராட்சச இரும்பு கம்பிகள் (ராடுகள்) செருகப்பட்டு, போல்ட் நெட்டுகள் வாயிலாக முறுக்கப்பட்டன. இந்த சாலை முக்கியம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாலும், தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் பாலத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்ய ஐஐடி வல்லுனர் குழு முடிவு செய்தது. அதன்படி நேற்று பாலத்தின் கீழ்பகுதியில் சென்சார்களை ஐஐடி குழுவினர் பொருத்தினர்.

திருச்சி ஜி.கார்னர் மேம்பாலம் சீரமைக்கும் பணி நிறைவு - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

இதையடுத்து இரவு பாலத்தின் பழுதடைந்த பகுதியில் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி பாலத்தின் உறுதித்தன்மை சோதனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிக எடையிலான லாரியை நிறுத்தும்போது சென்சார் ஒரு மில்லி மைக்ரான் மீட்டர் அளவில் கூட அசைவோ, நகர்தலோ இல்லாமல் இருந்தால், பாலம் உறுதியுடன் இருப்பதாக முடிவு செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு திறந்து விடப்படும். சென்சாரில் மாற்றம் ஏதாவது தெரிய வந்தால் மீண்டும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடரும் எனக்கூறப்படுகிறது. பாலம் பழுது காரணமாக சாலையில் செய்யப்பட்டிருக்கும் போக்குரத்து மாற்றத்தால் இப்பகுதியில் தற்போது வரை வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக 20க்கும் மேற்பட்ட போலீசார் இரவும், பகலும் ‘ஷிப்ட்’ முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சோதனை வெற்றி பெற்றால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது போலீசாரின் பிரச்னையும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget