2 ஆண்டுகளில் சுற்றுலா தலமாக மாறும் பச்சை மலை - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி மாவட்டம், பச்சைமலையை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகரின் எல்லைகள் விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படை பணிகள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின்படி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில், ஒருசில பகுதிகளில் இன்னும் வளர்ச்சி எட்டாக்கணியாக இருந்தது. தற்போது தான் அந்த பகுதிகள் வளர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை நோக்கிய தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் டாப் செங்காட்டுபட்டி ஆகிய மலை கிராமங்கள், 50 ஆண்டுகளாக பெரியனவில் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. மேலும், அப்பகுதி பழங்குடியின் மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த தொலைநோக்கு பார்வையோடு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் கனவு திட்டம் என்றே சொல்லும் அளவிற்கு பச்சை மலையை பசுமையான இடமாகமாற்றவும், பழங்குடியின மக்கனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசிற்கு ஆவணம் செய்துள்ளார்.
பச்சைமலை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறியதாவது: பச்சை மலை மக்களின் அடிப்படை தேவைகள் இரண்டு, அதில் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவது, அங்குள்ள மக்கள் அனைவரும் தோட்டக்கலை பயிர்களான மரவள்ளிக்கிழங்கு, முந்திரி உற்பத்தி மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு உற்பத்தி பொருட்களும் இடைத்தரகர்கள் மூலம் நுகர்வோர்களுக்கு சென்றடைவதால் அவர்களுக்கு போதிய வருமானமின்றி நலிவடைந்துள்ளனர். இதனால் அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்க உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்வோர்களுக்கு நேரடியாக சென்று அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த மண்ணிற்கு தகுந்த வேளாண் பயிர்கள் உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மரவள்ளி கிழங்கு, முத்திரி இவைகளுக்கு அதிகளவில் ரசாயனம் பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகிறார்கள். அவர்களை அதே பயிர்களை இயற்கையாக உற்பத்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற வேளாண் பயிர்கள் உற்பத்தி செய்வதாக இருந்தால், தண்ணீர் என்பது அவசியமானது. ஆனால் பச்சை மலையில் தண்ணீர் என்பது இல்லை, மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் மேலிருந்து கீழே வழிந்தோடிவிடும். அந்த நீரை தேக்கிவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு இல்லை எனவே முதல்கட்டமாக தண்ணீரை தேக்கி வைக்கும் திட்டம் உள்ளது. அதே சமயம் பச்சை மலையை பொறுத்தவரை ஒரு சுற்றுலாதலமாக மாற்றுவதற்கான முயற்சி கோரையாறு அருவியில் சீரமைத்து இரண்டு அடுக்காக தண்ணீர் தேங்கி நின்று வழிந்தோடும்படி வடிவமைக்கவும், வழிந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க 63 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மலையேறும் வசதிகள் ஏற்படுத்துவதற்கு 2 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் என 3 தடங்களாக பிரிக்கப்பட்டு அந்த வழித்தடங்களில் 500மீ ஒரு இடத்தில் இளைபாறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தவும், 2 ஏக்கரில் அட்வென்சர் வினையாட்டு தனம் அமைக்கவும். 2.5கிமீ அளவில் குளம் அமைத்து, அதில் படகு சவாரி செய்வதற்கான வசதியும், ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னது அரசு அனுமதி அளித்தால் இன்னும் 3 வருடங்களுக்குள் பச்சைமலையை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிவிட முடியும்.
இப்பகுதி சுற்றுதலமாக மாறினால், இப்பகுதியில் உள்ள மக்கள் சிறிய கடைகள், உணவகங்கள் என்று தங்களு டைய வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள உதவியாக அமையும் திருச்சி மக்களுக்கும் ஒரு பொழுது போக்கு அம்சம் உள்ள இடமாக மாறிவிடும். இதுவே மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும். மற்ற பொதுமக்களுக்கும் ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்தும் என்றார்.
மேலும், பச்சை மலையில் இருந்து கீழே இறங்கி வரும் 15 கிமீ சாலை பாதை கரடுமுரடாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.7.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சோபனாபுரத்தில் இருந்து டாப் செங்காட்டுபட்டி வரை புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை மலையில் செல்போன் சிக்னல் பிரச்சனை இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியதால், அங்கு 3 புதிய செல்போன் சிக்னல் கோபுரங்கள் அமைக்க பிஎஸ்என்எல் மூலம் அறிவுறுத்தி உள்ளோம். பச்சைமலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. அரசுக்கு இந்த பச்சை மலை பகுதியை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற திட்ட அறிக்கைக்கு அரசு அனுமதி வழங்கினால். அடுத்த 2 ஆண்டுக்குள் பச்சைமலை ஒரு முன்னேற்றம் அடைந்துவிடும் என்றார்.