மேலும் அறிய

திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

ஒருங்கிணைந்த நகர்வுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திருச்சி மாநகரத்திற்கு உகந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும்.

திருச்சி மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் பேசியதாவது, தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல், திருச்சி மாநகராட்சியிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்றார். மேலும் அதற்கான முதற்கட்ட ஆலோசனைதான் இது. இந்த சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் மெட்ரோ துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்படும்.

திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

மேலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கு தேவையான ஒருங்கிணைந்த நகர்வுத்திட்டம் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும். ஒருங்கிணைந்த நகர்வுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திருச்சி மாநகரத்திற்கு உகந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன முதன்மை மேலாளர்கள் ஆர்.எம்.கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன், மாநகராட்சி செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தையா, உதவி கோட்ட பொறியாளர் சத்தியன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தகவல் கூறும்போது.. மெட்ரோ ரயில் சேவை  திருச்சிக்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும், மக்கள் பெரும்மளவுக்கு பயன்பஎறுவார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டம் பெரும் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக உருமாரும் என்றார். மேலும் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் விரைந்து எடுத்துவருவதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget