மேலும் அறிய

காவிரி பாலம் எப்போது திறப்பு..? - திருச்சி மக்களுக்கு ஆட்சியர் கொடுத்த தகவல் இதோ

திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளமான காவிரி பாலம் சீரமைக்கும் பணிகள் முடிவுற்று இம்மாதம் இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.

திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரிப் பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015 நவம்பரில் ரூ.1.35 கோடி, 2018 மார்ச்சில் ரூ.35 லட்சம், 2018 செப்டம்பரில் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக் குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ.6.87 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் செப்டம்பர் மாதம்  10-ந் தேதி இரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆகஸ்ட் மாதமே இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்தது. எனவேதான் இந்தப்பணி அப்போது ஒத்தி வைக்கப்பட்டது என்றனர். 

காவிரி பாலம் எப்போது திறப்பு..? - திருச்சி மக்களுக்கு ஆட்சியர் கொடுத்த தகவல் இதோ

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறுகையில், “திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரி பாலத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகுமானதால், காவிரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை செப்டம்பர் மாதம் 10 தேதி சனிக்கிழமை இரவு 12 மணி முதல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அவ்வபோது மழையின் காரணமாக பணிகள் நடைபெற தாமதமாகியது. அதே நேரத்தில் போக்குவரத்து மாற்றத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் காவேரி பாலம் சீரமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கபட்டதுள்ளது.  மேலும் சில காரணங்களால் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது, ஆகையால் தான் இத்தகைய தாமதத்திற்கு காரணம். எனவே இம்மாதம் இறுதியில் மீண்டும் காவேரி பாலம் புதுபொழிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்டும்” என தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget