மேலும் அறிய

தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசு துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை அடித்த 8 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் வருமான வரிதுறை அதிகாரிகள் போல் நடித்து , ஆள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் அதிரடியாக கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சுதாகர் என்பவர் வீரப்பூர் கிராமத்தில் மகாமுனி மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 01 ஆம் தேதி கடையின் உரிமையாளர் சுதாகர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா என்பவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 5 நபர்கள் காரில் வந்தனர்.

மேலும், நாங்கள் வருமானவரி துறை அலுவலகத்தில் இருந்து சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி, மேற்படி மெடிக்கல் ஷாப்பில் சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த சுதாகரை தாங்கள் வந்திருந்த காரில் அழைத்து கொண்டு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசு துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை அடித்த 8 பேர் கைது

அப்போது அந்த நபர்கள், சுதாகர் குடும்பத்தாரிடம் தாங்கள் வருமானவரித்துறை மற்றும் சுகாதரத்துறை அதிகாரிகள் என அரசு துறைகளை மாற்றி மாற்றி கூறியதுடன் முதலில் 20 இலட்சம் பணம் தருமாறு பேரம் பேசி, பின்பு 10 இலட்சம் தருமாறு கேட்டுள்ளனர்.

சுதாகரின் குடும்பத்திற்கு சந்தேகம் வந்ததின் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்.9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உத்தரவின் பேரில் மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து மேற்பார்வையில் மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன், இராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் துறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசு துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை அடித்த 8 பேர் கைது

திருச்சி அருகே வருமானவரிதுறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் மஞ்சம்பட்டி அருகே திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரத விலாஸ் முறுக்கு கடையில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்றனர் அப்போது அங்கு இருந்த குற்றவாளிகள் நௌவ்ஷாத்,  சேகர்,சுதாகர், மாரிமுத்து, வினோத் கங்காதரன், கார்த்திகேயன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது மேற்படி நபர்கள் பணம் பறிக்கும் எண்ணத்தில் சுதாகரை கடத்தியது தெரியவந்தது.

மேலும், மேற்படி குற்றவாளிகடம் விசாரணை செய்த போது இதற்கு முன்பு இதே போன்று துறையூரில் உள்ள சௌடாம்பிகை அம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி அங்கிருந்து 5.18 இலட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றினை எடுத்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசு துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை அடித்த 8 பேர் கைது

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 8 பேர் கைது

மேற்படி குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகை, கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார். இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய 8 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சம்பவங்கள் தொடர்பாக மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். குறிப்பாக இந்த குற்றவாளிகள் சென்னை. கோயம்புத்தூர், கடலூர், சேலம், திருப்பூர், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, ஆட்கடத்தல் மற்றும் அரசு பொதுதுறையின் பெயரினை பயன்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் இது போன்று சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் நடப்பதாக சந்தேகம் எழும்பட்சத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உதவி எண்.9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்
Embed widget