மேலும் அறிய

திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 13,603 மாணவர்களும் 16.400 மாணவிகளும் மொத்தம் 30,003 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3,225 மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.


திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

மேலும், இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 1ஆ தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், சுமார் 3,302 மையங்களில், 7.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 1,135 பறக்கும் படையினரும், தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் 01.03.2024 ஆம் தேதி இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வு திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களும், இவற்றுள் சிறைச்சாலை தேர்வு மையம் 1. ஆக மொத்தம் 130 தேர்வு மையங்களிலும் 13,603 மாணவர்களும் 16.400 மாணவிகளும் மொத்தம் 30,003 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 4.03.2024 முதல் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இதில் 15,211 மாணவர்களும், 17,102 மாணவிகளும் ஆக மொத்தம் 32,313 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு 276 சொல்வதை எழுதுபவரும், 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு 185 சொல்வதை எழுதுபவர்கள், 250 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர் 1600 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி வருவாய் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு மொத்தம் 9 தேர்வு மையங்களும் 11 ஆம் ஆண்டு 7 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.


திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 130 தேர்வு மையங்கள்; 30,003 மாணவ, மாணவிகள்

திருச்சி மத்திய சிறையிலேயே சிறைக்கைதிகளுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு மேல்நிலை 11  வகுப்பிற்கு  35 சிறை தேர்வர்களும், 12 ஆம் வகுப்பில்  9 சிறை தேர்வர்களும் ஆக மொத்தம் 44 சிறை தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.மேல்நிலை தேர்விற்கு திருச்சி கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் ஆக மொத்தம் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 34 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் சென்றடைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget