மேலும் அறிய

சித்தன்னவாசல் சுற்றுலா தலம் - தமிழக அரசுக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உணவு அறை, போதுமான படகு வசதி தேவை என்றும், சுற்றுலா தலத்தை மேம்படுத்த கோரியும், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு செல்லும் சாலையில் அன்னவாசல் அருகில் அமைந்துள்ளது சித்தன்னவாசல். இதற்கு, 'தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்ற சிறப்பு பெயரும் உண்டு. சித்தன்னவாசல் என்றால் இதற்கு துறவிகள் இருப்பிடம்' எனப் பொருள். சித்தன்னவாசல் ஓவியங்கள், 7-ம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை என சொல்லப்படுகிறது. பாறை படுக்கைகளில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு உள்ளது. கி.பி.8, 9-ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இந்தப்பகுதி `ஏழடிபட்டம்' என்று அழைக்கப்படுகிறது கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு, இங்கு உள்ள கல்வெட்டுகளே ஆதாரம். பண்டையகால தமிழகம், ஓவியக் கலையிலும் நடனக் கலையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்த சிறப்பை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள் என்று வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்துள்ளனர். மேல் விதானத்தில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக் குளத்தைக் காட்டுகிறது. அதில் தாமரை மலர்களும் மலராத மொட்டுகளும் சிவன் பக்தர்களாகிய சமணப் பெரியோர்களும் காட்சியளிக்கின்றனர். இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வலதுபக்கத் தூணில் நடன மங்கை தனது இடது கையைத் துதிக்கைபோல் வளைத்திருக்கிறார்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலம் - தமிழக அரசுக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை

மேலும் முகம் சோகமாக இருக்கிறது. மேலும், இந்த ஓவியத்தில் பறவைகள், மீன்கள், எருமை மாடுகள், யானை என பல உயிர்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இரு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போன்று ஓர் ஓவியமும் நம்மை ஈர்க்கிறது. நடுமண்டபத்தை அடுத்து இருப்பது கோவில். வலப்பக்கமும், இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், சமணத் தலைவர் சிலையும் உள்ளன. சித்தன்னவாசலை சுற்றி குடுமியான்மலை, நார்த்தாமலை, அண்ணாபண்ணை மற்றும் சிறப்பு மிக்க கோவில், தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளது. சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக வருகை தருவர். சில சுற்றுலா பயணிகள் தலத்திற்கு மதிய உணவுடன் வந்து செல்வர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலம் - தமிழக அரசுக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு களிப்பர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும், செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்வர். மலையின் அழகை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வர். சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் நுழைவு வாயிலில் ஜல்லிக்கட்டை போற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

சித்தன்னவாசல் சுற்றுலா தலம் - தமிழக அரசுக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை

சுற்றுலாதலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை இங்கேயே பொழுதை கழிக்கின்றோம். ஆனால் எங்களுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதில்லை. கொண்டுவந்து சாப்பிடுவதற்கு உணவு அறை இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடிங்கி சென்றுவிடுகின்றன. படகுகுளத்தில் போதுமான படகுகள் இல்லை. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கும் அவலம் உள்ளது. எனவே புதிய படகுகளை இயக்க வேண்டும். சேதமடைந்த படகுகளை சீரமைக்க வேண்டும். சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு உண்டான பொருட்கள் பல உடைந்து விளையாட முடியாமல் உள்ளது. அவைகளை சரி செய்து இன்னும் பல விளையாட்டு உபகரணங்களை சேர்க்க வேண்டும். பல வருடமாக செயல்படாமல் இருக்கும் இசை நீரூற்றை திறந்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். மொத்தத்தில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை புதுப்பிக்க வேண்டும் என்றனர். மேலும் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Embed widget