மேலும் அறிய

Lok Sabha Election 2024: திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுக்கு, தபால் ஓட்டு சீட் படிவம் அனுப்பும் பணி தொடங்கியது

தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு படிவம் அனுப்பி வைக்கும் பணி திருச்சி மாவட்டத்தில் தொடங்கியது..

பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேட்பு மனுத்தாக்கல்  நாளை 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமார் அறிவிப்பு 

திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.

Lok Sabha Election 2024: திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுக்கு,  தபால் ஓட்டு சீட் படிவம் அனுப்பும் பணி தொடங்கியது

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை ஊ- ஏபைடை என்ற மொபைல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். இதில் வரப்பெறும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் உரிய விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும்.

Lok Sabha Election 2024: திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுக்கு,  தபால் ஓட்டு சீட் படிவம் அனுப்பும் பணி தொடங்கியது

தபால் ஓட்டு சீட் படிவம் அனுப்பி வைக்கும் பணி தொடக்கம்..

திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு படிவம் அனுப்பி வைக்கும் பணி திருச்சி மாவட்டத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. இதனைமுன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்துவார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தபால் வாக்குகள் அளிப்பதற்கான படிவத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.பின்னர் தபால் நிலையத்தில் இருந்து தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான படிவங்கள் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியும் துவங்கியது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
Malawi Vice President: அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
Malawi Vice President: அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Embed widget