கரூர்: பிறந்தநாள் நிகழ்ச்சியில் குளிர்பானம் அருந்திய சிறுமிக்கு வாந்தி மயக்கம்...!
’’சிறுமி அருந்திய குளிர்பான விற்பனை செய்த கடையை உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தப்போது குளிர்பானம் கடந்த ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது’’
கரூர் சின்ன ஆண்டாங் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ இவரது மகன் கணேஷ் வயது 13 இவரது மகள் தரணி வயது 9 இவர்கள் இருவரும் நேற்று இரவு அருகில் உள்ள நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர்கள் பிரபல நிறுவனத்தின் குளிர்பானங்களை அருந்தி உள்ளனர்.
பின்னர் குழந்தைகளை இளங்கோ அவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இன்று காலை எழுந்தவுடன் சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் ரீதியாக சோர்வடைந்து உள்ளார் உடனே சந்தேகம் அடைந்த இளங்கோ தனது மகன் மற்றும் மகள் ஆகியோரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் குளிர்பானங்கள் சாப்பிட்டதால் அஜீரணக் கோளாறு காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர் குழந்தையின் பெற்றோரிடம் கூறினார்.
காலையிலிருந்து மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்ட இளங்கோ மருத்துவ ஆலோசனைக்கு பிறகு சற்று நிம்மதி அடைந்தார் பின்னர் சிறுமிக்கு மருத்துவமனையிலேயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டு பின்னர் வீட்டுக்கு சிறுமியை மருத்துவர் அனுப்பி வைத்தனர். இந்த கூல்ட்ரிங்ஸ் சம்பவத்தை இளங்கோ அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க உடனே அவர்கள் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் வாங்கப்பட்ட கூல்டிரிங்ஸ் விவரம் பற்றிய கேட்டறிந்தனர். பின்னர் கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு பகுதியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைக்கு சென்று கேட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து இந்த தகவலை கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரை வீரன் அவர்கள் சின்ன ஆண்டான்கோவில் பகுதியிலுள்ள சிறுமி அருந்திய குளிர்பான விற்பனை செய்த கடையை ஆய்வு செய்தார். அப்போது அந்த சிறுமி குளிர்பானம் கடந்த ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது எனவும் தயாரிக்க தேதியிலிருந்து 9 மாதங்கள் பயன்படுத்தலாம் என குளிர்பான கடையில் ஊழியர் தெரிவித்துள்ளார்.
கடையை ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அவர்கள் வழங்கிய தகவலை சேகரித்து கொண்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். நேற்று பிறந்தநாள் விழாவில் வழங்கிய கூல்டிரிங்ஸ் அருந்திய சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதற்கு இரவு அருந்திய கூல்டிரிங்ஸ் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் தொந்தரவா என பெற்றோர்கள் புலம்பி கொண்டுள்ளனர். இந்த கூல்டிரிங்ஸ் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த தகவல் சில நொடியிலேயே பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதற்கு கமெண்டும் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த நிகழ்வு குறித்து சிறுமியின் அண்ணன் கணேஷ் கூறுகையில் நேற்று இருவரும் பிறந்த நாள் விழாவிற்கு சென்றதாகவும், அங்கு கூல்டிரிங்ஸ் இருந்ததாகவும், நாங்கள் அதை பருகியதால் இன்று காலை என் தங்கைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார் .