மேலும் அறிய

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; புதுக்கோட்டையில் 2 லட்சம் டோக்கன்கள் விநியோகம் - சூடுபிடிக்கும் பணிகள்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் விண்ணப்பங்கள், டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று முதல் தொடங்கியது..

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை:

இதனால் முதற்கட்ட பகுதிகளுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 தாலுகாவில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 454 விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வினியோகம் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வரை சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள், டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. 597 அமைவிடங்களில் 852 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பணி அடுத்த மாதம் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். பயோ மெட்ரிக் கருவி உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; புதுக்கோட்டையில் 2 லட்சம் டோக்கன்கள் விநியோகம் - சூடுபிடிக்கும் பணிகள்..!

விண்ணப்ப பதிவு முகாம்கள்:

மேலும் விண்ணப்பதாரர்கள் குடும்ப தலைவி நேரில் வர வேண்டும். டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய் துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத்தேவையில்லை.

விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை செல்போன் செயலியில் தனியாக பதிவேற்றம் செய்வார்கள். இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மக்கள் தவறாமல் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
Upcoming 7 Seater: பட்ஜெட்டா? ப்ரீமியமா? 4 புது 7 சீட்டர் எஸ்யுவிக்கள் - மெஜஸ்டர் தொடங்கி டெய்ரோன் வரை - லாஞ்ச் எப்போது?
Upcoming 7 Seater: பட்ஜெட்டா? ப்ரீமியமா? 4 புது 7 சீட்டர் எஸ்யுவிக்கள் - மெஜஸ்டர் தொடங்கி டெய்ரோன் வரை - லாஞ்ச் எப்போது?
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
Embed widget