மேலும் அறிய

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து, அமைதி பூங்காவாக திகழ்கிறது- டிஜிபி சைலேந்திர பாபு

அமைச்சர் கே. என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு மற்றும் வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை சரியான முறையில் சென்று கொண்டு உள்ளது. இதனால் சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

திருச்சி மாவட்டத்தில் 62 ஆவது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிள், கோ - கோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேடையில் சிறப்புரையாற்றிய தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு, "தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் ஜாதி சண்டை கிடையாது. மத கலவரங்கள் இல்லை, கள்ளச் சாராயம், துப்பாக்கி சூடு கலவரங்கள் இல்லை இத்தனை பெருமைக்கும் முக்கியமானவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் 1.34 லட்சம் காவலர்கள் தான். பல்வேறு கட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் 444 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 1ஆம் தேதி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து, அமைதி பூங்காவாக திகழ்கிறது- டிஜிபி சைலேந்திர பாபு

இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் காவலர்களின் பங்கு அளப்பரியது. ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. 1956 ,1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஹாக்கி போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதில் இரண்டு வீரர்கள் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவலர்கள் என்பது சிறப்பு மிக்கது. 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற  காவலர் இந்திய அணியின் சார்பாக 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கு கொண்டார். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்னும்  காவலர் இந்திய அணி சார்பில்  100 மீட்டர் ஓட்டப்பந்தய ரிலே ரேசில் கலந்து கொண்பார்  என்பது  பெருமைக்குரிய செய்தி. தமிழ்நாடு காவல்துறை கருதுகிறது. 2020ம்  ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையான காவல்துறை போட்டியில் தமிழக காவல் துறை 5  தங்கப்பதக்கம், 4   வெள்ளி பதக்கம், 5  வெண்கல பதக்கம் என 14 பதக்கங்களை பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்றது. விளையாட்டு நம் அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது. மேலும் காவலர்களுக்கு  உடல் நலம், மிக மிக முக்கியம். விளையாட்டு வீரர்கள்  மற்ற காவலர்களுக்கு இன்றைக்கு ஒரு ரோல் மாடல்களாக உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் சுறுசுறுப்புக்கும் நேர்மைக்கும் நீங்க ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள் என்பதை மனதில் கொண்டு நீங்க சிறப்பாக  விளையாட வேண்டும்.

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து, அமைதி பூங்காவாக திகழ்கிறது- டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்பதற்கு சில வரையறைகள் உள்ளது. அதில் ஜாதி கலவரங்கள், மத கலவரங்கள் போன்ற மோதல்கள் எதுவும் இல்லாமல், துப்பாக்கி சூடுகள், சாராய சாவுகள் இல்லாமல் மிக அமைதியாக தமிழகம் தற்போது உள்ளது. அதேபோல் மாநிலங்கள் அளவில் உள்ள எல்லா ரவுடிகளின் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாக இருந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிதி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை என்டர்போல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர விரிவாக்கம் என்பது திருச்சி மட்டுமல்ல, சென்னையில் இது போன்ற விரிவாக்கம் உள்ளது, புதிய தொழிற்சாலைகள், புதிய குடியிருப்புகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

தமிழக முதல்வர்,காவலர்களுக்கு 7 நாள் முழுவதும் வேலை என்பது இருந்ததை சட்ட திருத்தம் செய்து, மற்ற அரசு ஊழியர்களைப் போல வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் தான் வேலை, ஆறாவது நாள் வேலை செய்தால் அதற்கு ஈசிஆர் வழங்கப்படுகிறது. ஒரு சில காலகட்டங்களில் குறிப்பாக ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு,திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட முக்கியமான காலங்களில் விடுமுறை என்பது வழங்க முடியாது என்ற நிலை உள்ளது. இருப்பினும் வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கான விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கு மீண்டும் சிபிஐக்கு  மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல, வேங்கைவயல் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையும்  சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கும் சிபிஐக்கு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget