MK Stalin Speech: ”திருச்சி என்றாலே வீரர்களின் கோட்டை என்பார் கலைஞர்” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை
கொரோனா காலகட்டத்தில் நிதியுதவி வழங்கிய வணிகர்களுக்கு பாராட்டுக்கள் என்று திருச்சியில் நடைபெற்று வரும் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்று வரும் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அதில், கொரோனா காலகட்டத்தில் நிதியுதவி வழங்கிய வணிகர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திருச்சி என்றால் திமுகவுக்கு திருப்புமுனை. அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்று வரும் வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு மற்றொரு திருப்புமுனையாகும். திருச்சி என்றாலே வீரர்களின் கோட்டை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறுவார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தோம்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்குகாண உதவிகளை செய்ய முயற்சித்துள்ளார். இப்போது நடப்பது திமுக ஆட்சி, மன்னிக்கவும் நமது ஆட்சி. திமுக ஆட்சியானது வணிகர்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யும் ஆட்சிதான். வணிகர்களின் நலன் காக்கப்பட்டால்தான். அரசுக்கு வரக்கூடிய வருவாயை காக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்