திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம்; திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
திருவாரூர், நாகை மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று காலை 9 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ், ரகுதிபதி, சிவசங்கள், மெய்யநாதன், உள்ளிட்ட அமைச்சர்கள் , திமுக சட்டம்ன்ற உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். பின்பு கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுகள், பூங்கொத்து, பின்னாடை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாங்கினார். மேலும் திருச்சி விமான நிலையத்தில் எந்த விதமான அசம்பாவிதம் சம்பவங்களும் ஏற்படாம இருக்க 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்று அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். முதல் நாள் நிகழ்வாக வருகிற 25-ந்தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறைவாரியாக ஆய்வு செய்கிறார். 2-வது நாள் 26-ந்தேதி( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந்தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார். பின்னர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார். இதனால் ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருவதாலும் மீண்டும் 27 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை திரும்ப இருப்பதால் அன்றைய நாட்களில் ட்ரோன்கள் பரப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.