ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் - கோவில் நிர்வாகம் விளக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கிழக்கு கோபுரம் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு கோவில் அதிகாரிகளே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, இந்த கிழக்கு வாசலில் இருக்கும் கோபுரம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும். முதலில் மொட்டை கோபுரமாக இருந்தது. பின்பு நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் அவை பூரண அமைக்கப்பட்டு,மேல் நோக்கி கோபுரமாக எழுப்பப்பட்டது. குறிப்பாக இந்த கோபுரம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோபுரத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் சில காரணங்களால் இன்று கோபுரத்தில் இருக்கும் சுவர் இடிந்து விழுந்து விட்டது. கோபுரத்தை சீரமைக்கும் பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்து அறநிலை துறைக்கு அனுப்பப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் ரூபாய் 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து , பழமை மாறாமல் முழுமையாக கோபுரம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கருத்து :
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். தினமும் உண்டியல் காணிக்கை செலுத்துகிறார்கள், இந்த கோவிலுக்கு வருவாய் அதிகமாக தான் உள்ளது. இருப்பினும் கோவில் நிர்வாகம் எதற்காக சீரமைக்கும் பணிகளை தொடங்குவதில் அலட்சியல் காட்டுக்கிறது. அதேபோல் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் முறையாக கோவிலை பராமரிக்கவில்லை, இதுபோன்று சம்பவம் இனிமேல் நடக்க கூடாது. மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேசமயம் இன்று நடந்த செயலுக்கு சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக இந்து அறநிலைத்துறை - கோவில் நிர்வாகம் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்