Spiritual tourism: சங்கடங்கள் தீரனுமா? தோஷங்கள் நீங்கனுமா? ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு வாங்க..!
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல்ல இருக்கிற ஜம்புகேஸ்வரர் கோவில பத்தி தான் இன்னைக்கு நாம பாக்க போறோம்.
திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதியில இருக்கு. இந்த கோவிலை பற்றி வரலாறு என்று பார்த்தோம்னா.. சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்ததாக சொல்லப்படுகிறது. அம்பிகை இங்கே இருக்கிற காவிரி தண்ணீரில் லிங்கம் பிடிச்சு வழிபட்டாங்களாம். அது மட்டும் இல்லாம சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தாருன்னு சொல்லப்படுகிறது.
அம்பிகையால தண்ணீரிலையே லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் அப்படிங்கறதுனால இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமாக கருதப்படுது. இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த கோவில்தான் நம்ம ஜம்புகேஸ்வரர் கோவில். இந்தக் கோயிலுக்குள்ள நுழையும் போது ரெண்டு பக்கமும் சின்ன, சின்ன கடைகள் இருக்கு. அதை தாண்டி வலது பக்கம் ஓவியமும், சிலையும் கலந்த ஒரு அழகான கலை வேலைப்பாடு இருக்கு. அதுல ஜம்புகேஸ்வரருக்கு யானை புனித நீர் ஊற்றி வழிபடுற மாதிரியான வேலைப்பாடு மிகவும் நுணுக்கமாக செஞ்சிருப்பாங்க.
இந்த கோவிலோட இன்னொரு வரலாறாக இன்னொரு விஷயமும் சொல்லப்படுது. அது என்ன வாங்க பார்க்கலாம், மாலியவான் சிலந்தியாகவும், பிற்பகந்தன் யானையாகவும் மாறி இந்த கோவிலில் இருக்கும் சிவனை வழிபட்டாங்கலாம். அப்போ சிலந்தி இறைவனுக்காக பிண்ணியா வலைய யானை பிரித்துப் போட்டதாம். அதுக்கப்புறம் இவங்க இரண்டு பேருக்கும் பெரிய சண்டை வந்து அதுல இரண்டு பேரும் இறந்துட்டாங்களாம்.
அந்த சிலந்தி கோச்செங்கட்சோழனாக பிறந்ததாக கூறப்படுது. தனது பூர்வ ஜென்ம ஞாபகமா யானை ஏற முடியாத அளவுக்கு குறுகலான படிகளை வச்சு இந்த கோயிலை கட்டினார் என்றும் சொல்லப்படுது. சரி இப்போ இந்த சிவன வழிபட்டா என்னென்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம். தனக்கு உண்டான ஸ்திரி தோஷத்தை நிவர்த்தி செய்றதுக்காக அம்பிகை, சிவன இங்க வழிபட்டாங்க அதனால இங்க ஜம்புகேஸ்வரர் வழிபடுவதன் மூலமா ஸ்திரி தோஷம் விலகும் என ஐதீகம்.
அடுத்ததா இங்கே இருக்கிற சிவலிங்கத்தை பத்தி பாக்கலாம்... சிவன் இங்க சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். கருவறைக்குள்ள பத்து பேர் மட்டுமே போகிற மாதிரியான சின்ன இடத்துல சிவன் லிங்க வடிவில் இருப்பாரு. இந்த மூலஸ்தானத்துக்கு எதிரா வாசல் இருக்காது. அதுக்கு பதிலா 9 துளைகளுடன் கூடிய ஒரு ஜன்னல் இருக்கு பக்தர்கள் சாமிய தரிசிச்சுட்டு வெளிய வரும்போது, இந்த ஜன்னல் வழியா சுவாமிய பார்த்து அதிக நேரம் வழிபட்டுட்டு போவாங்க. இங்கே இருக்கிற அகிலாண்டேஸ்வரி அம்மன பத்தி சொல்லியே ஆகணும்.
சிவன வழிபட்டுட்டு போறவங்க அம்பாளை பாக்காம போகவே மாட்டாங்க. இங்கே இருக்கிற அகிலாண்டேஸ்வரி அம்மன் அகிலத்தை காப்பவளாக அருள் புரியிறாங்கன்னு சொல்லப்படுது. அதனால அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுறாங்க. ஆடி மாசத்துல இங்க ஆடி வெள்ளி திருவிழா ரொம்ப சிறப்பா கொண்டாடப்படும். ஆடி வெள்ளி அன்னைக்கு அதிகாலையில் இருந்து நள்ளிரவு வர தொடர்ச்சியாக கோவில் நடையும் திறந்திருக்கும். அந்த நாள் அன்னைக்கு சிவன், அம்பாளுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனால படிக்கிற பள்ளி மாணவர்கள் கூட ஆடி வெள்ளி அன்னைக்கு இங்கு வந்து அம்பாளையும் ,சிவனையும் வழிபடறாங்க.
அடுத்தது செல்லக்குட்டி அகிலாவ பத்தி பார்க்கபோறோம்.. இந்த கோவில்ல துதிக்கை மூலமா யானை தண்ணீர் எடுத்துட்டு வந்து இறைவனை வழிபட்டதா சொல்லப்படுது. அதனாலேயே இந்த கோவிலுக்கும் யானைக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கு. அப்படி இந்த கோவிலுக்கு இறைவனுக்கு திருப்பணிகள் செய்ய கொண்டுவரப்பட்ட யானை தான் அகிலா. கடந்த 11 ஆண்டுகளாக யானை அகிலா திருவானைக்காவல் கோவிலில் திருப்பணிகள் செஞ்சிட்டு வருது.
அகிலாவுக்கு 20 வயது ஆனாலும் அதோட சுட்டித்தனத்துக்கு அளவே கிடையாது. அதனாலேயே அகிலா இங்கே இருக்கிற பக்தர்களுக்கும் கூட செல்லப் பிள்ளையாகவே விளங்கி வருது. இந்த அகிலா யானை குளிப்பதற்காகவே கோவில் வளாகத்துல பிரத்தியேக நீச்சல் குளம் அமைக்கப்பட்டு இருக்கு. தினமும் மாலை நேரங்கள்ல இந்த நீச்சல் குளத்துல அகிலா மிகவும் ஜாலியா விளையாடும். இந்த கண்கொள்ளாக் காட்சி தினமும் கோவிலுக்கு வர பக்தர்கள், பொதுமக்கள் எல்லாருமே வேடிக்க பாப்பாங்க. பெரியவங்க, குழந்தைங்க அப்படி எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச யானையாக இந்த அகிலா வலம் வந்துட்டு இருக்கு.
தோஷங்கள் நீங்கனும் சங்கடங்கள் தீரணும்னு நினைச்சு தான் திருவானைக்காவல் கோவிலுக்கு வரணும்னு அவசியம் இல்ல. ஒரு தடவை இந்த கோவிலுக்கு வந்தாலே திரும்பத் திரும்ப வர தோன்றும் அளவுக்கு இதனுடைய கட்டிட அமைப்புகள், சுற்றுப்புறச் சூழல்கள் எல்லாமே அமைஞ்சிருக்கு. அப்படிப்பட்ட கோவிலுக்கு நாமளும் ஒரு விசிட் அடிக்கலாமா???