மேலும் அறிய

பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

விபத்துகளை தவிா்க்க சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் - பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகையால் காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றினால் விபத்துக்கள் நடப்பதை முற்றிலும் தடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும், அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும்.

பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசியது

போதைப் பொருள்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை குறைத்து, மூளையைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் அதிலிருந்து விலகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மேலும், சாலைகளில் பயணிக்கும்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டினால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் சீட்பெல்ட் அணிந்து பயணித்தால் எதிா்பாராத விபத்துகள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதும் தவிா்க்கப்படும். 

பெரம்பலூரை போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்டக் காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். 

தொடா்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைத்தாா் ஆதா்ஷ் பசேரா.

கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், காவல்துறையினா் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Embed widget