மேலும் அறிய

பெரம்பலூரில் சிப்காட் தொழில் பூங்கா - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு கார் மூலம் வருகை தந்தார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்தார். மேலும், அதில் அமையவுள்ள முதல்வர் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் சற்று நேரம் ஓய்வெடுத்தார். இதையடுத்து மாலை 4 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் மாளிகைமேட்டுக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றார். தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தபடி, பெரம்பலூர் மாவட்டத்தில், எறையூர் கிராமத்தில் 243.49 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குறுகிய காலத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் சிப்காட் தொழில் பூங்கா - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 4 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. இதுவரை மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2 ஆயிரத்து 440 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 29 ஆயிரத்து 500 ேபருக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து, எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ஈர்க்கப்படும் முதலீடு ரூ.5 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்து வருகிறது. 

பெரம்பலூரில் சிப்காட் தொழில் பூங்கா - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாடு பாரம்பரிய பெருமையை கொண்டுள்ளது. உலக அளவில் தோல் இல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு காலணிகளுக்கு நுகர்வோர் விருப்பமும் அதிகளவில் உள்ளது. மேலும் இத்துறையில் அதிக வளர்ச்சி மட்டுமின்றி, மிகப்பெரிய ஏற்றுமதி சாத்திய கூறுகளும் உள்ளன. அத்துடன் மிகப்பெரிய வேலை வாய்ப்பு உருவாக்கும் துறையாகவும் இத்துறை விளங்குகிறது. இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக முதலமைச்சரால் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி அன்று துறை சார்ந்த காலணிக் கொள்கை வெளியிடப்பட்டது. காலணிக் கொள்கையின் கீழ், காலணி உதிரிபாகங்களின் தொகுப்பு உற்பத்தி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க உயர்வு அடையாளம் காணப்பட்டு, அதில் கவனம் செலுத்தப்பட்டு, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காலணி உற்பத்தி செய்யும் தொகுப்பு தொழில் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே முதலமைச்சரால் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ஒரு காலணி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டம், எறையூர் 2-வது காலணி பூங்காவாக இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget