மேலும் அறிய

அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி இறந்த சம்பவத்தில் இழப்பீடு கேட்டு திருச்சியில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24-ந் தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களை அழைத்துக் கொண்டு மேள தாளங்களுடன் சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வல்லவன் (வயது 41), ரவி (43) சுமதி, (43) அருண்குமார் (30), ராஜதுரை (31) ஆகியோர் புருஷோத்தமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புருஷோத்தமன் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தன்னை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக புகார் அளித்துள்ளார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வல்லவன், ரவி, சுமதி, அருண்குமார், ராஜதுரை ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். கடந்த 25-ந் தேதி அருண்குமாரை கைது செய்ய விக்கிரமங்கலம் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அருண்குமார் வீட்டில் இல்லாததால் அதே கிராமத்தில் உள்ள அருண்குமாரின் மாமனாரும், விவசாயியுமான செம்புலிங்கம் (52) வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசார் செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செம்புலிங்கம் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செம்புலிங்கத்தின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதையடுத்து டாக்டர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்கு மூலத்தில் செம்புலிங்கம் தனது வீட்டிற்கு தலைமைகாவலர் பழனிவேல் தலைமையில் போலீசார் வந்து மருமகன் அருண்குமார் குறித்து விசாரணை செய்ததாகவும், அவர் வீட்டில் இல்லை என்று கூறியபிறகும், தன்னையும், தனது மனைவி சுதா மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரை போலீசார் தாக்கியதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே செம்புலிங்கத்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தப்போக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 7-ந் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

அரியலூரில் போலீசார் தாக்கியதில் விவசாயி இறந்ததாக உறவினர்கள் போராட்டம்

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள்  செம்புலிங்கம் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசாரை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில், உதவி போலீஸ் கமிஷனர்கள் சுந்தரமூர்த்தி, கென்னடி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என்று 100-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். மேலும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம் மற்றும் அரியலூர் போலீசாரும் போராட்டம் நடத்த முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் தாக்கியதால் தான் செம்புலிங்கம் பலியானதாகவும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருடைய குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, செம்புலிங்கம் இறந்த சம்பவம் குறித்து, அவருடைய உறவினர் அளித்த புகாரின் பேரில் செம்புலிங்கத்தை தாக்கிய 8 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து செம்புலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து செம்புலிங்கத்தின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget