மேலும் அறிய

மண்பாண்டங்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன் - அசத்தி வரும் திருச்சி ரம்யா...!

திருச்சி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலில் பலவிதமான பொருட்களை செய்து அசத்தி வரும் கடைதான் சந்தானாலட்சுமி மண்பாண்ட கடை.. இதைப் பற்றி பார்க்கலாம்

வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் மண்பாண்ட பொருட்கள் அழிந்து கொண்டே செல்கின்றன என்று சொல்லலாம். அந்த வகையில் மண்பாண்ட பொருட்களை காண்பதே அரிதாக உள்ளது. ஆனால் இன்றும் கூட சிலர் மண்பாண்ட பொருட்களை உபயோகிப்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் திருச்சியில் வயலூர் சாலையோரம் உள்ள மண்பாண்ட பொருட்கள் விற்பனையகத்தில் ஒரு ரூபாயில் இருந்து தொடங்கி 1000 ரூபாய் 3000 ரூபாய் வரையிலான அனைத்து வகையான புதுவிதமான மண்பாண்ட பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

திருச்சி வயலூர் சாலை சோமரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது இந்த சந்தானலட்சுமி மண்பாண்ட கடை ஆகும். இந்த  மண்பாண்ட பொருட்கள் என்றாலே பொதுவாக விளக்கு, பானை மண் சட்டி, என்று தான் பார்த்துள்ளோம். ஆனால் அவற்றை மிஞ்சிய வித்தியாசமான பொருட்கள் இந்த விற்பனையகத்தில் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் இருந்து, வீட்டு அழகு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவகையான பொருட்கள் பார்ப்பதற்கே கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

மண்பாண்டங்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன் - அசத்தி வரும் திருச்சி ரம்யா...!

மேலும்  ஒரு ரூபாய்க்கு அகல்விளக்கு என்று தொடங்கி, பெரிய விளக்குகள் மற்றும் வீட்டில் அழகுக்காக தொங்கவிடப்படும் மணிகள் போன்ற பலவிதமான பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி இங்கு விற்கப்படும் சற்றே வித்தியாசமான 'மேஜிக் விளக்கு' என்று அழைக்கப்படும் விளக்கு அடிப்பகுதியில் எண்ணெய் ஊற்றி அதை நேராக திருப்பும்போது அந்த எண்ணெய் ஆனது ஒரு சொட்டு கூட கீழே கசியாமல் விளக்கின் மேல் பகுதிக்கு வந்து விடுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இங்கே விற்கப்படும் மண்ணில் செய்த குருவிபொம்மை விசில் போன்ற அமைப்புடன் வருகின்றது. அதை சாதாரணமாக ஊதினால் விசில் போன்ற சத்தமும், அதை நீரில் மூழ்க வைத்து எடுத்து ஊதினால் குருவி கத்துவது போன்ற சத்தமும் எழுப்புகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

மண்பாண்டங்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன் - அசத்தி வரும் திருச்சி ரம்யா...!

மேலும் குழந்தைகள் விளையாடும் அழகு அழகான செப்பு சாமான்களும் இங்கு கிடைக்கின்றன. இது தவிர இங்கு சமைக்க உதவும் பொருட்களான வாணலிகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. மேலும் துளசி மாடம், மண்சட்டி, மண்பானை போன்ற பொருட்களும் பல்வேறு அளவுகளிலும் அளவுக்கு ஏற்ற விலைகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் குடிக்க உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள் கூட மண்ணில் தயாரித்து இங்கே விற்பனை செய்கின்றனர். இதன் மூடி பிளாஸ்டிக் பொருளிலும், தண்ணீர் பாட்டில் மண்ணிலும் செய்யப்பட்டிருப்பது மிகவும் வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர் ஊற்றி வைக்க உதவும் ஜாடிகள் கூட இங்கு செய்து விற்கின்றனர். 

மண்பாண்டங்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன் - அசத்தி வரும் திருச்சி ரம்யா...!

குறிப்பாக அழகுக்காக விற்கப்படும் புத்தர் சிலை மற்றும் குபேர பானை போன்றவையும் பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் யானை பொம்மை, குதிரை பொம்மை போன்ற மண் பொம்மைகள் 600 ரூபாயிலிருந்து ஆரம்பமாகின்றன. நீர் ஊற்றி வைக்கப்படும் பெரிய அளவிலான நீர் ஜாடிகள் குழாயுடன் வருகிறது. அவையும் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கின்றன. அனைத்துமே நமது பட்ஜெட்டிற்கு ஏற்றார் போன்ற விலையிலேயே கிடைக்கின்றன.

மண்பாண்டங்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன் - அசத்தி வரும் திருச்சி ரம்யா...!

இங்கு இந்த மண்பாண்ட பொருட்கள் செய்து விற்கும் விற்பனையாளர்கள் மண்பாண்ட பொருட்களை வெளியூர்களுக்கு அல்லது வேறு மாநிலங்களுக்கு பார்சல் செய்து கொடுக்கின்றனர். இதன் காரணமாக எங்கிருந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து இந்த மண் பாண்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த நாகரீக கால கட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் பார்ப்பதே அரிது, என்ற சூழ்நிலையில், இதுபோன்ற, சிறுசிறு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை கூட மண்ணில் செய்து விற்பனை செய்து வரும் சாதனை பெண் ரம்யா.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
1 லட்சம் பேருக்கு வேலை! விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா - ரூ.1894 காேடியை ஒதுக்கிய மத்திய அரசு
1 லட்சம் பேருக்கு வேலை! விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா - ரூ.1894 காேடியை ஒதுக்கிய மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
1 லட்சம் பேருக்கு வேலை! விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா - ரூ.1894 காேடியை ஒதுக்கிய மத்திய அரசு
1 லட்சம் பேருக்கு வேலை! விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா - ரூ.1894 காேடியை ஒதுக்கிய மத்திய அரசு
தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி
தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர் பேட்டி
குண்டர் சட்டத்தில் மயிலாடுதுறை பெண் கைது! - காரணம் இதுதான்...!
குண்டர் சட்டத்தில் மயிலாடுதுறை பெண் கைது! - காரணம் இதுதான்...!
30 ஆண்டுகள் தலைமறைவு: தமிழகம், கேரளா வெடிகுண்டு வழக்குகளில் சிக்கிய பயங்கரவாதிகள் கைது!
30 ஆண்டுகள் தலைமறைவு: தமிழகம், கேரளா வெடிகுண்டு வழக்குகளில் சிக்கிய பயங்கரவாதிகள் கைது!
Top 10 News Headlines(02.07.25): அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு உதவிகள், வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட மோடி, மஸ்க் சாமர்த்திய பதில் - 11 மணி செய்திகள்
அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு உதவிகள், வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட மோடி, மஸ்க் சாமர்த்திய பதில் - 11 மணி செய்திகள்
Embed widget