மேலும் அறிய
Advertisement
ராமஜெயம் கொலை வழக்கு : கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை.
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. ஆகியோர் விசாரித்த நிலையில், தற்போது கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகிறார்கள். கொலை நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும், கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய பிரபல ரவுடிகள் உள்பட 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ராமஜெயம் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக அவருக்கும், சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சிலரிடம் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் ஏற்கனவே இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 12 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தபட உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 12 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் கொலை நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு காரைக்காலில் அவர்கள் சந்தித்து பேசிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றது. மேலும் இந்த நபர்களுக்கு ஜாபர் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புள்ளது. எனவேதான் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். மேலும் இந்த 5 பேருடன் மற்ற 8 பேருக்கும் தொடர்பு இருக்கின்றது. இதன் அடிப்படையில் தான் 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கண்டிப்பாக துப்பு துலங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion