மேலும் அறிய
Advertisement
புதுக்கோட்டையில் ரத்தகாயங்களுடன் ஒருவர் பிணமாக மீட்பு - பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட மோதல் காரணமா?
புதுக்கோட்டையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் பழனியப்பா கார்னர் பகுதி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும். இந்த நிலையில் பழனியப்பா கார்னர் அருகே நேற்று காலை 6 மணி அளவில் பொது மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் வணிக நிறுவன கடை முன்பு ரத்த காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் கயிறு ஒன்று இறுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் வலது கண்ணில் காயமும், வலது கையில் ரத்த காயமும், ரத்தம் வடிந்த நிலையிலும் இருந்தது. அந்த உடல் அருகே உணவு பொட்டலம் ஒன்றும், ரூபாய் நோட்டுகள், சில்லறைகள் ஒரு பாலித்தீன் பையில் வைத்த நிலையில் இருந்தது. மேலும் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்த நபர் குறித்து அப்பகுதியினர் டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்க்கு டவுன் துணை காவல் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து பிணமாக கிடந்த நபர் பற்றி விசாரணை நடத்தியதில் அவர் புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியை சேர்ந்த சரவணன் (40) என தெரிய வந்தது. அவர் கூலிவேலைக்கு சென்று வந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், குடும்பத்தை பிரிந்து வசிப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள திரையரங்கத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. திரையரங்கத்துக்கு வந்த ரசிகர்களுடன் மோதல் அல்லது வாக்குவாதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? எனவும் காவல்துறையினர் விசாரித்தனர். இதற்கிடையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் அருகில் உள்ள ஒரு டீக்கடைக்குள் புகுந்து பின் வெளியே வந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இறந்தவரின் உடல் அப்புறப்படுத்தப்படாமல் காலை 9 மணிக்கு மேல் வரையும் அதே இடத்தில் கிடந்தது. இதனால் பரபரப்பான காலை நேரத்தில் அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. மேலும் பிணம் கிடந்த இடத்தின் அருகே இருந்த கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கணினியில் பார்வையிட்டனர்.
இதில் சரவணன் நேற்று முன்தினம் பகல் 1.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அதே இடத்தில் குடிபோதையில் கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரை எழுப்புவதற்காக ஒருவர் வந்து சென்றதும் பதிவாகி இருந்தது. குடிபோதையில் அருகில் உள்ள பதாகையில் அவர் கைகளால் தாக்கியதில் ரத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை கூறினர். மேலும் இறந்த சரவணின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின் அதில் உள்ள அறிக்கை குறித்து காவல்துறை கூறுகையில், சரவணனின் கழுத்தில் கிடந்தது கயிறு அல்ல. அவர் அணிந்திருந்த டிராக் சூட்டில் உள்ள கயிறாகும். பிரேத பரிசோதனையில் அவர் இறந்தது இயற்கை மரணம் என தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது சாவு இயற்கை மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
விழுப்புரம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion