மேலும் அறிய

மத்திய மண்டலத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் காட்டு மக்கள்

திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஆனால் 12 சதவீத பேர்கள் மட்டுமே 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

மத்திய மண்டலத்தை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை  சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட அதிகாரிகள்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் 50 சதவீத பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 12 சதவீத பேர் 2 தவணையும் செலுத்தி விட்டனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 12 ஆம்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் ஒரு நாளில் மட்டும் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை 3 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 8.86 லட்சம் பேர், முன்களப் பணியாளர்கள் 11.89 லட்சம் பேர், 18-44 வயது உள்ளவர்கள் 1.89 கோடி பேர், 45-60 வயது உள்ளவர்கள் 1.20 கோடி பேர், 60 வயதுக்கு மேல் 55.26 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.


 இதன்படி பார்த்தால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள பொதுமக்களில் 52 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 15 சதவீத பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். திருச்சியில் 14,91,503 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 11,63,524 பேர் முதல் தவணையும், 3,27,979 பேர் 2 தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 4,29,850 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,20,549 பேர் முதல் தவணையும், 1,09,301 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் 4,62,926 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 3,88,036 பேர் முதல் தவணையும், 74,890 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 3,75,473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,05,041 பேர் முதல் தவணையும், 70,432 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். கரூரில் 4,86,995 பேர் முதல் தவணையும், 1,21,253 பேர் இரண்டு தவணை என்று மொத்தம் 9,03,245 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெரம்பலூரில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 3,02,795 பேரில், 2,46,043 பேர் முதல் தவணையும், 56,752 பேர் 2வது தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர்.


மத்திய மண்டலத்தில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் காட்டு மக்கள்

தஞ்சையில் 11,35,631 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 9,18,992 பேர் முதல் தவணையும், 2,16,639 பேர் 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். திருவாரூரில் 6,09,317 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 5,05,684 பேர் முதல் தவணையும், 1,03,633 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். நாகையில் 4,07,702 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 3,28,978 பேர் முதல் தவணையும், 78,101 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். மயிலாடுதுறையில் தற்போது வரை 3,71,983 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,09,188 பேருக்கு முதல் தவணையும், 62,795 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். கொரோனா தொற்றில்  இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதை தீவிரப்படுத்தி உள்ளது, ஆனால் மக்கள் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் தயக்கம் காட்டாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டினால் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget