மேலும் அறிய

ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.

அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் தலைமையில், நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடையிலிருந்து மதுபாட்டில்களை வெளியில் கொண்டு வந்து வைத்து கடையை பூட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுசெயலாளர் திருமாவளவன் உள்பட 25 பேர் மீது கடை சூப்பர்வைசர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தனி வீடு ரவி என்கின்ற ரவிசங்கர் தலைமையில், மாநில துணைத்தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  பாமகவினர் போராட்டம்

இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  பாமகவினர் போராட்டம்

இதற்கிடையே பா.ம.க.வினர் வந்த 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சி- சிதம்பரம் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் சூரியமணல் கிராமத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதையடுத்து, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம் பா.ம.க. நிர்வாகிகள் மனு அளித்தனர். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதையிடமும் மனு அளித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Amit Shah: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசம்... திமுக-வின் ஊழல் பட்டியல் நீளமானது - அமித்ஷா அடுக்கிய லிஸ்டை பாருங்க
Amit Shah: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசம்... திமுக-வின் ஊழல் பட்டியல் நீளமானது - அமித்ஷா அடுக்கிய லிஸ்டை பாருங்க
TNEA Rank List: 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? கலந்தாய்வு எப்போது?
TNEA Rank List: 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? கலந்தாய்வு எப்போது?
Top 10 News Headlines(27.06.25): NDA கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்?, ரயில் கட்டணம் உயர்வா? ஈரான் தலைவர் துணிச்சல் பதிவு - 11 மணி செய்திகள்
NDA கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்?, ரயில் கட்டணம் உயர்வா? ஈரான் தலைவர் துணிச்சல் பதிவு - 11 மணி செய்திகள்
Gold Rate June 27th: அடடா.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றும் கணிசமாக குறைவு - எவ்வளவு தெரியுமா.?
அடடா.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றும் கணிசமாக குறைவு - எவ்வளவு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue
வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின் | MK Stalin on Duraimurugan | Udhayanidhi stalin | DMK
Krishna Drug Issue : ”நான் கொக்கைன் எடுக்கல”பல்டி அடித்த கிருஷ்ணாஶ்ரீ காந்த் வழக்கில் Twist

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசம்... திமுக-வின் ஊழல் பட்டியல் நீளமானது - அமித்ஷா அடுக்கிய லிஸ்டை பாருங்க
Amit Shah: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசம்... திமுக-வின் ஊழல் பட்டியல் நீளமானது - அமித்ஷா அடுக்கிய லிஸ்டை பாருங்க
TNEA Rank List: 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? கலந்தாய்வு எப்போது?
TNEA Rank List: 2.41 லட்சம் மாணவர்களுக்கு பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? கலந்தாய்வு எப்போது?
Top 10 News Headlines(27.06.25): NDA கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்?, ரயில் கட்டணம் உயர்வா? ஈரான் தலைவர் துணிச்சல் பதிவு - 11 மணி செய்திகள்
NDA கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்?, ரயில் கட்டணம் உயர்வா? ஈரான் தலைவர் துணிச்சல் பதிவு - 11 மணி செய்திகள்
Gold Rate June 27th: அடடா.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றும் கணிசமாக குறைவு - எவ்வளவு தெரியுமா.?
அடடா.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றும் கணிசமாக குறைவு - எவ்வளவு தெரியுமா.?
Tamil Nadu Headlines(27-06-2025): NDA கூட்டணியில் விஜய்?, தங்கம் விலை மேலும் குறைவு, ஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட கமல்ஹாசன் - 10 மணி செய்திகள்
NDA கூட்டணியில் விஜய்?, தங்கம் விலை மேலும் குறைவு, ஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட கமல்ஹாசன் - 10 மணி செய்திகள்
Watch Video: பங்க்கர் பஸ்டர் எப்படி வேலை செய்யும்? சர்ச்சைகளுக்கு நடுவே வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்
பங்க்கர் பஸ்டர் எப்படி வேலை செய்யும்? சர்ச்சைகளுக்கு நடுவே வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்
Amit Shah: அண்ணாவையும், பெரியாரையும் விமர்சித்தது பாஜக அல்ல - அமித்ஷா புது விளக்கம்
Amit Shah: அண்ணாவையும், பெரியாரையும் விமர்சித்தது பாஜக அல்ல - அமித்ஷா புது விளக்கம்
Khamenei: மீண்டும் தோன்றிய காமேனி; அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக துணிச்சல் பதிவு - என்ன கூறியுள்ளார்.?
மீண்டும் தோன்றிய காமேனி; அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக துணிச்சல் பதிவு - என்ன கூறியுள்ளார்.?
Embed widget