மேலும் அறிய

திருச்சி : ஜனவரி 4 தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவிப்பு.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைதாரர் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போர் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 416 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பொருட்கள் 1,225 ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கி. (அரை கிலோ), நெய் 100 கிராம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு 500 கிராம் மற்றும் முழுக்கரும்பு மற்றும் ஒரு துணிப்பை ஆகிய பொருட்கள் இடம்பெறுகிறது.

திருச்சி : ஜனவரி 4 தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும்,மேலும் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கு ஏதுவாக 750 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம், போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்படும். மேலும் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார். தற்போது நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும்  பொங்கல் பரிசு தொகுப்பு கண்டிப்பாக வழங்கப்படும். மேலும்  குடும்ப அட்டைதாரர்கள் இவ்வித சிரமமின்றி நியாயவிலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். மேலும்  குடும்ப அட்டைதாரர் உடல்நிலை சரியில்லாமலும், வயதானவர்களாக இருந்தால் அவர்களின் குடும்ப அட்டையில்  இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

திருச்சி : ஜனவரி 4 தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவ தொடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது ஆகையால் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில், சமூக இடைவெளி விட்டு பொருட்கள் பெறவேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, செல்போன் எண் 9445045618 தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget