திருச்சியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 7000 பேர் பங்கேற்பு
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கரும்பொருளாக வைத்து திருச்சி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் CII மற்றும் YII இணைந்து 8 வது முறையாக மாரத்தான் போட்டியை நடத்துகிறது. மேலும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டுக்கான கரும்பொருளாகும். மக்கள் நல்லெண்ணத்துடன் ஒன்றிணைந்தால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். இந்த இயக்கத்தின் மூலம், மாற்றத்தை ஊக்குவிக்கவும், உடல் உறுப்பு தானம் செய்பவர்களை அதிக அளவில் பதிவு செய்ய ஊக்குவிக்கும் என நாங்கள் நம்புகிறோம். உடல் உறுப்பு தானம் பற்றிய தவறான புரிதல்களை களைவதன் மூலம், மனித குலத்திற்கு அது ஏற்படுத்தும் மிகப்பெரிய நன்மையான தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இதன் நோக்கமாகும். இந்த நிகழ்ச்சியை ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றுவதற்காக 7000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். இதில் 5 கி. மீ. 10 கி. மீ. 21 கி. மீ வெற்றி பெறுபவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் ரூ.3,00,000 (ரூபாய் மூன்று லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு டி- ஷர்ட், பிப், பை, பதக்கம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றினார்கள்.
மேலும், 5 கிலோ மீட்டர் ஓட்டம் காலை 6:45 மணிக்கு தொடங்கியது. இந்த மாரத்தான் போட்டியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆகியோர் இணைந்து கொடியசைத்து செய்து தொடங்கிவைத்தார்கள். முன்பாக 10 கிலோ மீட்டர் சவால் ஓட்டம் காலை 6:15 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் காமினி, IPS அவர்கள் கொடியசைத்து செய்து தொடங்கிவைத்தார். இதேபோல் 21 கி. மீ. தூர அரை மாரத்தான் ஓட்டத்தை காலை 5:00 மணியளவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் IPS கொடியசைத்து செய்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் இளைஞர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். உடல் உறுப்பு தானம் என்பது மனிதர்கள் அனைவருக்கும் முக்கியம். ஆனால் பலர் இதன் முக்கியதுவத்தை பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். ஆகையால் வருங்கால தலைமைமுறைகள் தான் உடல் உறுப்பு தானம் பற்றி பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்து சென்று விழிப்புணர்வு வழங்க வேண்டும் என நோக்கத்தோடு இந்த போட்டி நடத்தபடுவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், முனைவர் செங்குட்டுவன், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர், திருச்சி, டாக்டர் T. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.