மேலும் அறிய

தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை - மத்திய அமைச்சர் சுபாஷ்சர்கார்

தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை என்றும், திருச்சியில் மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ்சர்கார் கூறினார்.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வந்திருந்தார். நேற்று காலை துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பூலாங்குடி காலனியில் உள்ள அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து திருச்சி புத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பா.ஜனதா கட்சியின் அலுவலக கட்டிடத்தை பார்வையிட்ட மத்திய இணை மந்திரி, அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது.. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்திலும் அவை சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டில் எந்த மாநிலமும் புதிய தேசிய கல்வி கொள்கையை நேரடியாக எதிர்க்கவில்லை. அதே சமயம் அவைகுறித்த மாநில அரசின் கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். புதிய கல்விக்கொள்கைப்படி புதிய பாடதிட்டத்தை மத்திய அரசு தயார் செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.

தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை  - மத்திய அமைச்சர் சுபாஷ்சர்கார்

திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும். அதுதவிர திருச்சி கோட்டத்தில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள லிப்டுகள் பிப்ரவரி மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பதில் உள்ள வழக்கமான நெறிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கவர்னர் தான் வேந்தர் என்பதால் அவருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு தேடுதல் குழு அமைத்து தேர்வு செய்பவர்களில் இருந்து துணைவேந்தரை கவர்னர் நியமிப்பார். இதில் அரசியல் கிடையாது. 

தேசிய கல்விக்கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை  - மத்திய அமைச்சர் சுபாஷ்சர்கார்

மேலும் அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை வைத்து இடம் ஒதுக்கி தந்தால் உடனடியாக தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை திருச்சியில் தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய இடம் ஒதுக்கி தந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் கடந்த 2 நாட்களாக திருச்சி பா.ஜ.க. நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருச்சி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. உறுதியாக வெற்றி பெறும் என்றார். பின்பு  தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசை கண்டு பயப்படுகிறார்கள் என்ற தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த குற்றச்சாட்டை சுபாஷ் சர்க்கார் மறுத்ததோடு, எந்த அதிகாரிகளும் மத்திய அரசை கண்டு பயப்படுவதில்லை என தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget